2,500 வருஷ புதிர்.. விடை தெரியாமல் திணறிய அறிஞர்கள்.. கண்டுபிடித்து பட்டையை கிளப்பிய 27 வயது இளைஞர்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிமு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து அறிஞர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தி வந்த ஒரு சமஸ்கிருத இலக்கண சிக்கலுக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் தீர்வு கண்டுள்ள விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "கால்பந்து ஃபீவர்ன்னா இதான் போலயே".. மெஸ்ஸி, எம்பாப்பே டீ ஷர்ட் அணிந்து தான் கல்யாணமே.. இணையத்தை கலக்கும் ஜோடி!!  

சமஸ்கிருத மொழி, இந்தியாவில் ஏறக்குறைய 25,000 மக்களால் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதிகம் சமஸ்கிருத பாஷை பேசும் மக்கள் இல்லை என்றாலும், அது மிகவும் பழமை நிறைந்த மொழியாகவும் பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில், கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால சமஸ்கிருத அறிஞர் பாணினி என்பவர் உருவாக்கிய இலக்கண விதிகளில் உள்ள புதிருக்கு 27 வயது இளைஞர் விடையை கண்டுபிடித்து பலரையும் மிரண்டு போக வைத்துள்ளார்.

அஷ்டாத்தியாயீ என அழைக்கப்படும் பாணினியின் இலக்கணத்தில் உள்ள விதிகள் பெரும்பாலும் முரண்களை ஏற்படுத்துவதாக அறிஞர்கள் தெரிவித்து வந்துள்ளனர். மேலும் இதில் உள்ள சிக்கல் என்ன என்பது பற்றி, கடந்த 2,500 ஆண்டுகளாக பல அறிஞர்கள் முயற்சித்த போதும் அதற்கு விடை கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் ரிஷி அதுல் ராஜ்போபட் ஆய்வு மாணவராக படித்ததுடன் சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது தான் இந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் கூறப்பட்ட இலக்கண புதிர் குறித்தும் படித்துள்ளார் ரிஷி. அந்த புதிர் சமபலம் கொண்ட இரண்டு விதிகளை பற்றியது என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாணினியின் விதியில் முரண் இருப்பதாக அறிஞர்கள் தெரிவித்து வந்ததை நிராகரித்த ரிஷி அதுல், முரண் ஏற்படும் சமயத்தில் ஒரு வார்த்தையின் இடது மற்றும் வலது பக்கங்களுக்கு பொருந்தும் விதிகளுக்கு இடையே வலது பக்கத்திற்கு பொருந்த கூடிய விதியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பாணினி கூறி உள்ளதாக ராஜபோபட் வாதிடுகிறார். இதனை பின்பற்றும் போது விதிவிலக்குகள் இல்லாமல் இலக்கண முறைப்படி சரியான சொற்களை முடிவதையும் அவர் கண்டறிந்துள்ளார்.

எங்கும் செல்லாமல் கேம்பிரிட்ஜில் சுமார் 9 மாதங்கள் செலவு செய்த ராஜ்போபட், நள்ளிரவு உள்ளிட்ட பல மணி நேரங்கள் நூலகங்களில் செலவு செய்து இதற்கான விளக்கத்தை கண்டுபிடித்துள்ளார். இது பற்றி பேசும் ரிஷி அதுல், "ஒரு மாதத்திற்கு புத்தகத்தை ஓரம் வைத்து விட்டு நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, சமையல் செய்வது, இறையை வேண்டுவது, தியானம் செய்வது என கோடை காலத்தை அனுபவித்தேன். பின்னர் வெறுப்புடன் மீண்டும் புத்தகத்தை எடுத்தேன். பக்கங்களை புரட்டும்போது சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இதற்கான விடை கிடைத்து அனைத்தும் புரிய தொடங்கின" என்ன ராஜ்போபட் தெரிவித்துள்ளார்.

2,500 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியில் இருந்த இலக்கண சிக்கல், பெரிய அறிஞர்களால் கூட தீர்வு எட்டப்படாமல் இருந்த சூழலில், கேம்ப்ரிட்ஜ் ஆய்வு மாணவர் அதற்கான சிக்கலை தீர்த்துள்ளது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

Also Read | அர்ஜென்டினா கப் ஜெயிச்ச இரவில்.. ஸ்தம்பிச்சு போன இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு!!

CAMBRIDGE STUDENT, SANSKRIT PUZZLE

மற்ற செய்திகள்