VIDEO : "'2020' இனி என்னவெல்லாம் செய்ய காத்திருக்கோ??... " முழுவதும் 'ஆரஞ்சு' நிறமாக மாறிய 'மாநகரம்',.. வேறு கிரகத்தில் இருப்பது போன்று... 'பயத்தை' கிளப்பும் 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக கலிபோர்னியா உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் மின்னல் வேகத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது.
கலிபோர்னியாவில் ஆண்டு தோறும், கோடை காலங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கலிபோர்னியாவின் பல பகுதிகளில் தீ வேகமாக பரவி வருகிறது. சில இடங்களில் மட்டும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வராமல் திணறி வருகின்றனர்.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத்தீயை அணைக்க போராடி வரும் அதே வேளையில், மொத்தம் 40 கி.மீ வரை தீ பரவி நாசம் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காட்டுத்தீ விபத்தால் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் 8 பேர் வரை இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும், சுமார் 3000 கட்டிடங்கள் வரை எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த காட்டுத் தீயால் கிரீக் அகதி முகாமில் உள்ள குடிசைகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், இந்த விபத்தால் சான் பிரான்சிஸ்கோவின் அனைத்து பகுதிகளும் ஆரஞ்சு நிறமாக காட்சி தருகின்றது. காலை எது மாலை எது என காலநிலை உள்ளதால் மக்கள் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல, வேறு கிரகத்தில் உள்ளதை போன்ற உணர்வை தருவதாகவும் கலிபோர்னியா மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் பல்வேறு துயரங்கள் நடந்து வரும் நிலையில், கலிபோர்னியாவில் நடந்த இந்த காட்டுத்தீ விபத்தும் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹோட்டலின் 'கார்' பார்க்கிங் பகுதியில்,,.. 'லேப்டாப்', புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்த 'சிறுமி'கள்,,.. காரணம் தெரிந்து தேடி வந்த 'உதவி',,.. நெகிழ்ச்சி 'சம்பவம்'!!!
- “கண் முன்னாலயே அப்பாவ சுட்டுட்டாங்க... 1 % தான் சார்ஜ் இருக்கு!” .. 30 மணி நேரம்.. காட்டுக்குள் சிக்கிய 15 வயது சிறுவன்.. திக்திக்.. நொடிகள்!
- 'நிலவின் தெள்ளத் தெளிவான புகைப்படம்...' 'அமெரிக்க புகைப்படக் கலைஞர் சாதனை...' 'துல்லிய' புகைப்படம் என அங்கீகரித்த 'நாசா...'
- 'அங்க டிசம்பர்லயே கொரோனா பரவிடுச்சு...' 'அதுமட்டுமல்ல, பெப்ரவரியில அங்க...' ஆளுநர் கூறிய செய்தியினால் மக்கள் அதிர்ச்சி...!
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
- ‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!
- "யார் சொன்னது பூமி உருண்டையானது என்று..." "பூமி தட்டையானது என நிரூபிப்பேன்..." விண்வெளி வீரரின் 'விபரீத' செயலும்... முடிவும்... 'நெஞ்சை' உலுக்கும் 'வைரல் வீடியோ'...
- ‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’!
- 'என்னோட பொண்ண காப்பாத்துங்க'...'சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்'.... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- ‘காற்றில் அணையாத ஜோதி’.. கலக்கும் ஜப்பான்.. களைகட்டும் ஒலிம்பிக் 2020!