சார், என் காருக்குள்ள 'அந்த' விலங்கு இருக்கு.. வேணும்னா நீங்களே போய் பாருங்க.. ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீஸ்
முகப்பு > செய்திகள் > உலகம்கலிஃபோர்னியா: கலிபோர்னியாவில் தடை செய்யப்பட்ட விலங்கை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த போதை இளைஞரை கலிஃபோர்னியா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆண்டர்சன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வட கலிபோர்னியாவில் உள்ள ஆண்டர்சன் பகுதியில் இளைஞர் ஒருவர் போதையில் கார் ஓட்டியதாக 29 வயதான டெய்லர் வாட்சன் என்னும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அந்த நபர் கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
கைது செய்யப்பட்ட பிறகு போலீசார் வாட்சனிடம் வழக்கமான சில கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போது அவர் தனது காரில் முதலை ஒன்று உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். உடனே காரை திறந்து பார்த்த காவல்துறையினர் கார் டிக்கியில் சிறிய முதலை இருந்தது தெரிய வந்தது.
பத்திரமாக மீட்பு:
இதுபற்றி உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, கலிஃபோர்னியா மீன் மற்றும் வனவிலங்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான விவரங்களை ஆண்டர்சன் பகுதி போலீசார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போலீசார் அந்த முதலை குட்டியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் முகநூலில் ஷேர் செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு:
கைது செய்யப்பட்ட வாட்சன் தற்போது சாஸ்தா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் நண்பர் சிறையில் அடைக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக அவருடைய முதலையை தான் பராமரித்து வருவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். ஏற்கனவே குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டோடு, தற்போது சட்டவிரோதமாக உயிருள்ள முதலையை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிமனிதர்கள் முதலைகள் வளர்க்க தடை:
அனுமதியின்றி கலிஃபோர்னியாவில் முதலையை செல்லப்பிராணியாக வைத்திருப்பது சட்டவிரோதமான செயலாகும். வணிகம் மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காக முதலைகளை வேட்டையாடுவது 1992-ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 1966-இன் அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதலைகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 5 மில்லியன் முதலைகள் இருப்பதாகவும், அதில் 1.25 மில்லியன் முதலைகள் புளோரிடாவில் இருப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. போதை மனிதரின் காரில் உயிருள்ள முதலை இருந்த சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரொனால்டோவின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - கியூட் வீடியோ..!
- 6 வருஷமா கழுத்தில் சிக்கிய டயருடன் போராடிய முதலை.. மீட்பவருக்கு சன்மானம் அறிவிப்பு..
- அந்த கார்ல லிஃப்ட் கேட்டு பாப்போம்.. ஐயோ மேடம் நீங்களா? எவ்ளோ பெரிய ஆளு நீங்க.. காரில் ஏறியவுடன் துள்ளி குதித்த பெண்கள்
- கார் சீட்டில் மர்ம காலடித் தடங்கள்.. திடீர்ன்னு பின் சீட்டில் கேட்ட 'குரல்'.. 3 நாட்களுக்கு பிறகு தெரிய வந்த அதிர்ச்சி 'உண்மை'
- முகேஷ் அம்பானி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்.. இந்தியாவின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று.. எத்தனை கோடி தெரியுமா?
- ஆஹா.. வேறலெவல் ஐடியா இது.. தம்பி எப்ப ஜாய்ன் பண்றீங்க.. அசந்துபோய் கூப்பிட்டு வேலை கொடுத்த கம்பெனி..!
- ரூ. 23 கோடி மதிப்புள்ள காரில்.. 417 கி.மீ ஸ்பீடுல பறந்த கோடீஸ்வரர்.. அடேங்கப்பா, இந்த காருக்கு 1500 குதிரைகளோட திறன் இருக்காம்!
- மறுபடியும் அதே மாதிரி நடந்த கொடுமை.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 40 கி.மீ தூரம்.. கொதித்த நெட்டிசன்கள்..!
- நெகிழ்ந்து போய் நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீரர்.. பேச வார்த்தைகளின்றி உருகி போன ஆனந்த் மகிந்திரா
- VIDEO: டூர் போனவர்களின் காரை புரட்டிப்போட்ட காட்டு யானை.. அலறிய குடும்பம்.. பதற வைத்த வீடியோ..!