"ரோடு ஃபுல்லா தக்காளி மட்டும் தான்".. அமெரிக்காவில் நேர்ந்த பரிதாபம்!!.. "மொத்தமா 1.5 லட்சத்துக்கும் மேலயாம்"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாலை முழுவதும் தக்காளிகள் நிரம்பிக் கிடந்த நிலையில், இது தொடர்பான பின்னணியும், புகைப்படங்களும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மதங்களை கடந்து ஒன்றிணைந்த மக்கள்.. களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்..!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள Vacaville பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தான் சுமார் 1,50,000 க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி, கடும் போக்குவரத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 5 மணியளவில், Vacaville நெடுஞ்சாலையில் பல டன் தக்காளிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, இரண்டு வாகனங்கள் மீது மோதி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், வாகனங்களில் மோதிய வேகத்தில் அங்குள்ள செண்டர் மீடியனிலும் லாரி மீண்டும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த நெடுஞ்சாலை முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் தக்காளிகள் சாலையில் சிதறிக் கிடந்தன. சாலையை சுமார் 200 அடி தூரத்திற்கு தக்காளிகள் மூடி இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

சாலை முழுவதையும் தக்காளிகள் ஆக்கிரமித்திருந்ததால், தூரத்தில் இருந்து பார்க்க சிவப்பு நிற போர்வை சாலையில் கிடந்தது போலவும் தோன்றியது. சாலையில் தக்காளிகள் கிடந்த போதிலும், அதன் மீது ஏராளமான வாகனங்கள் ஏறிச் சென்றதால், தக்காளி முழுவதும் நசுங்கி போனது. அது மட்டுமில்லாமல், அதன் மேல் ஏறி சென்ற 7 வாகனங்களும் விபத்துக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து கலிஃபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து படையினர் பேசுகையில், தக்காளி சாலையில் கவிழ்ந்ததன் காரணமாக மூன்று பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஒரு சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல, சாலை முழுவதும் கிடந்த தக்காளியை சுத்தம் செய்து நெடுஞ்சாலையை திறக்கவே அதிகாரிகளுக்கு பல மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

சாலை முழுவதும் தக்காளிகள் கிடக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பதப்படுத்தப்பட்ட தக்காளியில் 90 சதவீதமும், உலகளவில் பதப்படுத்தப்பட்ட தக்காளியில் கிட்டத்தட்ட பாதி அளவும் கலிஃபோர்னியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என மாநிலத்தின் தக்காளி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

Also Read | சிக்ஸர், பவுண்டரி'ன்னு விளாசிய சூர்யகுமார்.. அவர பாத்து 'கோலி' செஞ்ச விஷயம்.. "அட, அவரே அப்டி பண்ணிட்டாரா?!".. செம வைரல் வீடியோ!!

CALIFORNIA HIGHWAY, TOMATOES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்