"பேசாம இலங்கையை வாங்கிடுங்க.. சிலோன் மஸ்க்-னு பெயர் வச்சுக்கலாம்".. எலான் மஸ்க்கு அட்வைஸ் செஞ்ச இந்திய தொழிலதிபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கு இந்திய தொழிலதிபர் ஒருவர் கொடுத்த அட்வைஸ் பற்றித்தான் இப்போது பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "ஹலோ.."தண்டவாளத்தின் அடியில் சிக்கியும், ரயில் போகும் வரை கூலாக போன் பேசிவிட்டு எழுந்து வந்த இளம் பெண்! யாரும்மா நீ?

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்தார் மஸ்க்.

43 பில்லியன்

ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார். அதன்படி டிவிட்டரை சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார் மஸ்க்.

பிளான் B

இதனிடையே, இலான் மஸ்க்கின் கோரிக்கையை டிவிட்டர் நிர்வாகம் நிராகரித்திருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய கோரிக்கையை ட்விட்டர் நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் தன்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார் மஸ்க். மேலும், கனடாவின் வான்கூவர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மஸ்க் ," என்னால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியும் என்று உறுதியாக கூற இயலாது. ஆனால், என்னுடைய கோரிக்கை அந்த நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டால் என்னிடம் பிளான் B இருக்கிறது" எனப் பேசியிருந்தார்.

அட்வைஸ்

இந்நிலையில், ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால் டிவிட்டர் மூலமாக எலான் மஸ்க்கிற்கு அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குணால்,"ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் சொன்ன விலை 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையின் கடன் தொகை 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அவர் இலங்கையை வாங்கி அதற்கு சிலோன் மஸ்க் என பெயரிட்டு அழைக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரை வாங்கும் மஸ்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், ஸ்நாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குணால் எலான் மஸ்க்கிற்கு அட்வைஸ் செய்தது குறித்து பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.

Also Read | திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார்.. துணை கலெக்டருக்கு நேர்ந்த பரிதாபம்.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி..!

SRI LANKA, CEYLON MUSK, SNAPDEAL, SNAPDEAL CEO, ELON MUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்