18 வயசு இளைஞரா மாறனும்.. வருஷத்துக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் 45 வயது தொழிலதிபர்.. 2 வருஷத்துக்கு அப்புறம் நடந்த மேஜிக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வயதை குறைக்க ஆண்டுக்கு கோடி கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறார். இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக மக்கள் தாங்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுவது உண்டு. அதற்காக உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களில் ஆர்வம் செலுத்தியும் வருகின்றனர். ஆனால், நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலமாக இழந்த இளமையை மீண்டும் அடையலாமா? என்ற நோக்கத்தில் ஆராய்ச்சிகள் ஒருபக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கடந்த இரண்டு வருடங்களாக வயதை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
அமெரிக்காவை சேர்ந்த பையோடெக் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பிரையன் ஜான்சன். தற்போது இவருக்கு 45 வயதாகிறது. தன்னுடைய வயதை குறைக்க முடிவெடுத்த இவர் அதற்காக 'Project Blueprint' எனும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டு இப்பயிற்சியை மேற்கொண்டுவரும் பிரையன் தனது உடலின் வயதை 5.1 ஆண்டுகள் குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இது உலக சாதனை எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
45 வயதான ஜான்சன், 30 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவுடன் இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த குழுவினர் அவரது உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஜான்சனின் ஒவ்வொரு உறுப்புகளையும் இளமையாக்க முயற்சித்து வருகின்றனர். இதன்மூலம் 18 வயது இளைஞராக மாற முடியும் என சொல்லப்படும் நிலையில் இதற்காக இந்த ஆண்டு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்க தயாராக இருப்பதாக ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
தினசரி அடிப்படையில் தனது எடை, உடல் நிறை குறியீட்டெண், குளுக்கோஸ் அளவு, இதய துடிப்பு மாறுபாடுகள் மற்றும் வெப்பநிலையை ஜான்சன் கவனித்து வருகிறார். இந்த திட்டத்தின்படி சில முக்கியமான கட்டுப்பாடுகளும் ஜான்சனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலையில் 5 மணிக்கு எழுவது, ஒரு நாளைக்கு சரியாக 1,977 சைவ கலோரிகளை உட்கொள்வது மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என ஒவ்வொரு விஷயத்தையும் அவரது மருத்துவ குழு பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறது.
இதில் பலன் கிடைப்பதால் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் செலவழிக்க ஜான்சன் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது. அதேபோல, வரும் ஆண்டுகளிலும் இந்த பரிசோதனைக்கு பணம் ஒதுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | உலகின் அழிவை கணிக்கும் Doomsday clock.. இன்னும் 90 செகண்டுகள் தான்.. பகீர் கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்..!
மற்ற செய்திகள்