'மொத்த லிஸ்ட்டும் கைக்கு வந்தாச்சு'... 'தாலிபான்களின் முதல் டார்கெட் இவர்கள் தான்'... வெளிவரும் அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தாலிபான்களின் கைகளுக்கு வந்துள்ள நிலையில், அவர்களின் அடுத்த டார்கெட் யார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். இதனால் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆப்கான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாகத் தாலிபான்கள் தொடங்கியுள்ளார்கள்.

அவர்களின் பட்டியலில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ராணுவத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்ற ரீதியில் பலரும் தப்பியோடி வருகிறார்கள். இதனிடையே பலரும் அச்சமுடன் பார்ப்பது முந்தைய ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய பெண்களின் நிலை குறித்துத் தான்.

அரசு அதிகாரிகள் பலரும் தங்கள் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளதாகவே கருதுகிறார்கள். அரசாங்கத்தில், ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தாலிபான் ஆதரவு வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பெருந்திரளாக ஆப்கானிஸ்தானுக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஆப்கானுக்குள் வரும் பட்சத்தில் நிச்சயம் அங்கு அமைதி நிலாவது என்றும், முன்னாள் அதிகாரிகள் மற்றும் அரசுத் துறையில் பணியாற்றிய பெண்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்