ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள்.. அங்க நின்ன பொண்ணு பின்னாடி வேகமா வந்த கை.. ஒரு செகண்ட் ஹார்ட் பீட்டே எகிறிடுச்சு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெல்ஜியம் : ரெயில் அருகே வரும் நேரத்தில், பெண் பின்னால் நின்ற வாலிபர் செய்த செயல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது ரோஜியர் மெட்ரோ நிலையம். அங்கே, கடந்த சில தினங்களுக்கு முன், மெட்ரோ ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனர்.

அப்போது, ரெயில் அருகில் வரவே, பயணிகள் ஏறுவதற்கு வேண்டி, ஆயத்தமாகி உள்ளனர். இதனிடையே, திடீரென தண்டவாளத்தின் அருகே நிற்கும் பெண் ஒருவரை, இளைஞர் ஒருவர் பின்னால் நின்று தள்ளி விட, நிலை குலைந்து போன அந்த பெண், தண்டவாளத்தின் ரெயில் பாதையில் விழுந்தார்.

மிகவும் அருகே ரெயில் வந்ததால், அங்கிருந்த சக பயணிகள் அதிர்ந்து போக, அதன் ஓட்டுனரின் சாதுர்யத்தால், பெண்ணிற்கு அருகே வந்த ரெயில் மறுகணமே நிறுத்தப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினார். இது தொடர்பான காட்சிகள், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதிர வைத்த வீடியோ

இந்த வீடியோ தற்போது வெளியாகி, கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விடும் நபர், அதற்கு முன்பாக சில நொடிகள், பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்துள்ளார். தொடர்ந்து, ரெயில் அருகே வருவது தெரிந்ததும், மிகவும் வேகமாக, முன்னோக்கி ஓடிச் சென்று, அந்த பெண்ணை ரெயில் பாதையில் தள்ளி விடுவது மிகவும் தெளிவாக தெரிகிறது.

கேப்டன் பதவி'ல இருந்து மாறுனா மட்டும் போதாது.. கோலி அந்த 'ஈகோ'வ விட்டே ஆகணும்.. பறந்த முக்கிய அட்வைஸ்

 

மருத்துவமனையில் சிகிச்சை

ரெயில் நிலையத்தின் அருகே வந்ததால், மெதுவாக ரெயில் வந்துள்ளது. ஆனால், அதே வேளையில், அதன் ஓட்டுனரும் பெண் விழுவதைக் கண்டு, வண்டியை வேகமாக பிரேக் பிடித்து நிறுத்தினார். அதன் பிறகு, அங்கிருந்த பயணிகள், அந்த பெண்ணிற்கு உதவி செய்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக, அந்த பெண் அதிகம் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.

அதே போல, அந்த ரெயில் ஓட்டுனரும் கடும் அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரையும் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், இருவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

செல்ஃபி'ய வித்தே 7 கோடி ரூபா சம்பாதிச்சுட்டாப்ல.. VIP'க்களை சோதித்த கல்லூரி மாணவன்.. அப்படி என்னய்யா இருக்கு அதுல?

வழக்குப் பதிவு

பெண்ணைத் தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அவரது மனநிலையை ஆராய, ஒரு மனநல நிபுணரை நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில், அவர் ஏன் அப்படி செய்தார் என்பது பற்றி, தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BRUSSELS MAN, WOMAN, METRO TRAIN, பெல்ஜியம், ரோஜியர் மெட்ரோ நிலையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்