'கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவவில்லை'... 'அறிக்கை அளித்த ஆய்வாளர்'... 'ஏன் அப்படி செய்தார்'?...வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஆய்வாளர்கள் சிலர் சீனா சென்றனர். அவர்களில் ஒருவர் பிரித்தானிய அறிவியலாளரான Peter Daszak.

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கக்கூடும் என உலக நாடுகள் பல சந்தேகம் எழுப்பிய நிலையில், அது உண்மையா இல்லையா என்பதை ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஆய்வாளர்கள் சிலர் சீனா சென்றனர். அவர்களில் ஒருவர் பிரித்தானிய அறிவியலாளரான Peter Daszak.

இவர் சீனாவுக்குச் சென்றுவிட்டு, கொரோனா வைரஸ், வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்கிற ரீதியில் ஒரு அறிக்கை தயார் செய்து, அவருடன் சென்ற 27 அறிவியலாளர்களையும் அதில் கையெழுத்திடச் செய்துள்ளார். ஆனால் அவர் அப்படிச் செய்ததற்கான காரணம் பின்னர் தான் தெரிய வந்தது. அவருக்கும் வுஹான்  ஆய்வகத்துக்கும் உள்ள தொடர்பை வேண்டுமென்றே மறைத்துள்ளார்.

Daszakக்கும், வுஹான் ஆய்வகத்துக்கும், அந்த ஆய்வகத்தின் தலைமை ஆய்வாளரான, வௌவால் பெண் என்று அழைக்கப்படும் Dr Shi Zhengli என்ற பெண்ணுக்கும் உள்ள தொடர்பு தற்போது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து தனது பொறுப்பிலிருந்து Daszak நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள நிலையில், Daszak பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்