'திவால் ஆயிட்டோம்'...'22,000' ஊழியர்களும் வீட்டுக்கு போங்க'.. பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்மிகவும் பழமையான நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1841 ஆம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் தாமஸ் குக். சுற்றுலா துறையை மையமாக வைத்து தொடங்கப்பட இந்த நிறுவனம், பிரிட்டனில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல ரயில், விமானம், மற்றும் சாலை போக்குவரத்துகளை செய்து வந்தது. பல லட்சக்கணக்கான சுற்றலா பயணிகள் இந்த நிறுவனத்தை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தாமஸ் குக் சொந்தமாக விமான சேவையும் நடத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தாமஸ் குக் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நிதியினை திரட்ட செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் குக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் உட்பட பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தாமஸ் குக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் உலகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல்கேரியா, கியூபா, துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேரை சொந்த நாட்டுக்கு கொண்டுவர பிரிட்டன் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் நிறுவனம் திவால் ஆனதால் 22,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
இதனிடையே பிரிட்டனின் தாமஸ் குக் நிறுவனத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தாம்ஸ் குக் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்