பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. பயணத்தை தொடங்கிய கொஞ்ச நேரத்துல அதிகாரிகளுக்கு போன அதிர்ச்சி தகவல்..
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல் அமெரிக்கா நோக்கி பயணத்தை துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே பழுதடைந்திருக்கிறது.
Also Read | இந்தியாவின் யூடியூப் கிராமம்.. தொழிலே வீடியோ மேக்கிங் தானாம்.. இப்படியும் ஒரு ஊரா..?
போர்க்கப்பல்
பிரிட்டிஷ் ராயல் நேவியின் விமானம் தாங்கி போர்க்கப்பலான HMS Prince of Wales அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட இருந்தது. இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள போர்ட்ஸ்மவுத் கடற்படை தளத்தில் இருந்து கிளம்பியது. ஆனால், விரைவிலேயே கடற்படை அதிகாரிகளுக்கு அவசர அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில், இந்த போர்க்கப்பலில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 6500 டன் எடைகொண்ட இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலை வரும் நாட்களில் நிபுணர்கள் பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளாறு
இதுபற்றி பேசிய பிரிட்டிஷ் ராயல் நேவியின் செய்தித் தொடர்பாளர்,"HMS Prince of Wales போர்க்கப்பல் தென்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு குறித்து நிபுணர்கள் ஆராய இருக்கிறார்கள்" என்றார். ஏற்கனவே கடந்த 27 ஆம் தேதி இந்த கப்பல் பயணத்தை துவங்க இருந்தது. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயண தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கப்பல், சனிக்கிழமை மதியம் புறப்பட்டதை தொடர்ந்து போர்ட்ஸ்மவுத்தில் உள்ள சவுத்சீ காமனில் இசைக்கச்சேரி நடத்தப்பட்டு மக்கள் கோலாகலமாக இந்த கப்பலை வழியனுப்பினர். இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள கேப்டன் ரிச்சர்ட் ஹெவிட்," அட்லாண்டிக் கடலில் HMS Prince of Wales போர்க்கப்பல் பயிற்சியை மேற்கொள்வது புதிய அனுபவமாக இருப்பதோடு நட்பு நாடுகளுடன் நெருங்கிய உறவை பிரதிபலிக்கும் விதமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கை
வட அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருந்த பயிற்சிக்காக இந்த கப்பல் தனது பயணத்தை துவங்கியது. புறப்பட்ட அடுத்தநாளே கப்பலில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோளாறை விரைவில் சரி செய்யலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருகின்றனர். இருப்பினும் கப்பலின் ப்ரொபெல்லர் ஷாஃப்டில் கோளாறு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய கப்பலை வேறு இடத்துக்கு நகர்த்த வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல் இயந்திர கோளாறு காரணமாக கடலில் நிறுத்தப்பட்டது, ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வானத்தில் இருந்து விழுந்த 'மர்ம' உலோக பொருள்??.. "ரோடு சைடு'ல வந்து கெடந்துருக்கு.." குழப்பத்தில் போலீசார்.. அதிர்ச்சி பின்னணி
- ஒரேயொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. 50 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான பெண்.. குழம்பிப்போன அதிகாரிகள்.!
- பின்லேடனுக்கு அப்பறம் அமெரிக்கா போட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்.. அல்கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி உயிரிழந்ததாக ஜோ பைடன் அறிவிப்பு..!
- 35 வருஷமா அமெரிக்க காவல்துறைல இருந்த உளவாளி?.. இவ்வளவு நாளுக்கு அப்பறம் சிக்கிய தம்பதிகள்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரே போட்டோ தானாம்.!
- ரோபோவாக மாற போகும் இறந்த சிலந்திகள்??.. "அட, என்னங்க சொல்றீங்க??.." சபாஷ் போட வைத்த ஆய்வு முடிவுகள்!!
- கொஞ்சம் அசந்தா அவ்வளவு தான்.. வலையில் சிக்கிய ஓநாய் மீன்.. மீனவர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு.. வைரலாகும் வீடியோ..!
- "சிங்கிள் ஆளா Bank உள்ள வந்து.. கொள்ளையடிச்ச பாட்டி".. விசாரணையில் வெளிவந்த ஷாக்-ஆன தகவல்..தீவிர தேடுதலில் போலீஸ்..!
- திடீர்னு பச்சை கலர்ல மாறுன வானம்.. ஆச்சர்யமா இருக்கேன்னு நினைச்ச மக்களுக்கு கொஞ்ச நேரத்துல காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரித்த ஆராய்ச்சியாளர்கள்.. வைரலாகும் வீடியோ.!
- இது என்ன ரகம்னே தெரியலயே.. கரை ஒதுங்கிய வினோதமான உயிரினம்..பீச்சுக்கு வாக்கிங் போனவருக்கு ஏற்பட்ட ஷாக்.. வைரல் புகைப்படம்..!
- மக்களுடன் தலைகீழா தொங்கிய ரோலர் கோஸ்டர்.. Prank-னு நெனச்சவங்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..