காது கேக்காம போச்சுன்னு 5 வருஷமா கவலையில் இருந்த நபர்.. செக் பண்ணப்போ ஒருநிமிஷம் மனுஷன் அதிர்ந்து போய்ட்டாரு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செவித்திறன் குறைந்துவிட்டதாக கருதி 5 ஆண்டுகள் கவலையில் இருந்த நபருக்கு தற்போது அதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "முன்னாடியே அதை செய்யணும்னு நெனச்சேன்.. ஆனா".. நடுங்க வச்ச ஷ்ரத்தா வழக்கு.. கைதான காதலன் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!

இங்கிலாந்தின் டோரஸ் கவுண்டியில் இருக்கும் வேமவுத் என்ற பகுதியை சேர்ந்தவர் வல்லேஸ் லீ. ராயல் நேவியில் பொறியாளராக பணியாற்றிவந்த லீ-க்கு சமீபத்தில் காது கேட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேவியில் பணியாற்றியதால் ஒருவேளை தனக்கு காது கேட்பதில் சிக்கல் வந்திருக்கலாம் என நினைத்த லீ, அதனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 5 வருடங்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு வந்திருக்கிறார் அவர்.

இதனிடையே சமீபத்தில் ஒருநாள் வீட்டில் இருந்தே செவியை பரிசோதனை செய்யும் கருவியை வாங்கியிருக்கிறார் லீ. அதன்மூலம் தனது காதை பரிசோதனை செய்தபோது உள்ளே ஏதோவொரு பொருள் இருப்பதை லீ கண்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவரை  சந்தித்திருக்கிறார். லீயை பரிசோதித்த மருத்துவர், அவரது காதுக்குள் இயர் பட்ஸ்-ன் சிறிய பாகம் இருப்பதை பார்த்திருக்கிறார்.

இருப்பினும், காதில் இருந்த மெழுகு போன்ற பொருளுடன் அது சிக்கி இருந்திருக்கிறது. மேலும், பல வருடங்கள் ஆனதால் அதை வெளியே எடுக்க சிரமப்பட்டிருக்கிறார் மருத்துவர். பின்னர், சிறிய சிகிச்சை மூலமாக, லீயின் காதில் இருந்த ஐயர் பட்ஸ்-ன் பாகத்தை வெளியே எடுத்திருக்கிறார் மருத்துவர்.

அதன்பிறகு தனக்கு காது நன்றாக கேட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் லீ. இதுபற்றி அவர் பேசுகையில்,"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆஸ்திரேலியாவில் உள்ள எனது குடும்பத்தைப் பார்க்கச் சென்றபோது, ​​இயர் பட்ஸ்-களை வாங்கியிருந்தேன். அப்போது அதன் பாகம் உள்ளேயே சிக்கியிருக்கும் என நினைக்கிறேன். 5 வருடங்களாக காதில் சிக்கிக்கொண்ட அந்த பாகத்தை மருத்துவர் வெளியே எடுத்ததும் அறையில் நிலவிய அனைத்து சத்தங்களையும் தெளிவாக கேட்டேன். இத்தனை ஆண்டுகளாக இருந்த சிக்கல் இப்போது தீர்ந்திருக்கிறது' என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Also Read | தூக்கமே வரமாட்டேங்குதா?.. இதை ட்ரை பண்ணிப்பாருங்க.. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ட்வீட்..!

BRITISH, MAN, HEARING LOSS, DISCOVER, BUD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்