'எச்சில் துப்பாதீர்கள்'.. மீறினால் 13,000 ரூபாய் அபராதம்.. எச்சரிக்கை விடுத்த அரசு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் அரசு தனது நாட்டில் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வைத்துள்ள எச்சரிக்கைப் பலகை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு கெட்ட பழக்கம் சாலைகளில் எச்சில் துப்பும் பழக்கம். குறிப்பாக வட மாநிலத்தவர்கள் பான் போன்ற புகையிலையைச் சாப்பிட்டு சாலையிலேயே எச்சில் துப்பிவிடுவார்கள். இந்தப் பழக்கத்தை வெளிநாட்டுக்குச் சென்றால் கூட இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. ஒரு சிலர் இப்படி நடந்து கொள்வதால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அவமதிப்பு ஏற்படுகிறது.
பிரிட்டனில் லெய்சஸ்டர் என்னும் நகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் இடம் அது. நீண்ட காலமாகவே அங்குச் சுகாதார பிரச்சினை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. சாலைகளில், நடைபாதையில், சுவர்களில் பான் எச்சில் கறைகள் படிந்துள்ளது. இதனால் கடுப்பான லெய்சஸ்டர் நகர ஆணையம், காவல்துறையுடன் சேர்ந்து அறிவிப்பு பலகை ஒன்றை ஆங்காங்கே வைத்துள்ளன.
அதில் 'பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற செயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு £150, (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில் குஜராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருக்கும் வெளிநாட்டவர் ஒருவர் இதைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, இந்தியர்களைக் குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு என இந்தியர்கள் இணையத்தில் புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்