'குளிர்காலம் வேற வருது...' 'அவங்களுக்கு' கண்டிப்பா 'பூஸ்டர் வாக்சின்' போட்டாகணும்...! - மூன்றாவது தடுப்பூசி போட தீவிரம் காட்டும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு எதிராக பிரிட்டனில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரிட்டன் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி பெற்றுள்ளனர். அவர்களில் 62% பேர் இரண்டாம் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
ஆனால் தற்போது புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோய் எதிர்ப்பாற்றலை குறையாமல் பராமரிக்க பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரிட்டனின் சுகாதார செயலர் சாஜித் ஜாவித், 'முதல் தடுப்பூசி திட்டம் நாட்டில் சுதந்திரத்தை மீட்டு தந்தது. பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அந்த சுதந்திரத்தை பாதுகாக்கும்' எனக் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழுவும், குளிர்காலத்திற்கு முன் ஆபத்தானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை போட்டு பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, இங்கிலாந்துக்கான இணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனாதன் வேன் டாம் என்பவரும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையானது தான் என கூறியுள்ளார்.
குறிப்பாக, குளிர்காலத்தில் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் ப்ளூ வைரஸ் போன்றவையும் பரவுவது கூடுதல் பிரச்சனையாக இருக்கும். அதனால் ப்ளூ மற்றும் கோவிட்டிற்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த' ஒரு நாட்டுக்கு போறதுக்கு மட்டும்... எந்த தடுப்பூசினாலும் 'ஓகே' தான்...! - கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...!
- கொரோனாவால் உயிரிழப்பா?.. இழப்பீடு வழங்குவது தொடர்பாக... காரசார விவாதம்!.. கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
- 'வாக்சின் போட்டாச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லல...' வெறும் 15 நிமிஷத்துக்குள்ள மொத்தம் 'மூணு டோஸ்' போட்ட பெண்மணி...! - ஷாக் ஆன கணவர்...!
- இந்தியாவுக்கு வருகிறது 4வது தடுப்பூசி!.. முன்னேறிய நாடுகளின் முதல் சாய்ஸ் 'இது' தான்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'முதல் டோஸ் ஒரு ஊசி!.. அடுத்த டோஸ் வேறொரு நிறுவனத்தின் ஊசி'!.. வலுக்கும் ஆற்றல்!.. ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- யாரெல்லாம் 'அந்த வாக்சின்' போட்டீங்களோ... அவங்களுக்கு 'கிரீன் பாஸ்' தர முடியாதுங்க...! - அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்...!
- கொரோனா '3-வது அலை' எப்படிங்க இருக்க போகுது...? 'ரெண்டு தடுப்பூசி' மாத்தி போட்டுக்கலாமா...? - பதில் அளித்த எய்ம்ஸ் இயக்குனர்...!
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை... பாஸ்போர்ட் உடன் இணைப்பது எப்படி?.. முழுமையான தகவல் உள்ளே
- தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே
- 'இந்தியா உட்பட 85 நாடுகள்'... 'இத கண்டுக்காம விட்டா பெரிய ஆபத்து'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!