'காரில் சென்ற குடும்பத்தை நோக்கி சரமாரியாக சுட்ட நபர்!'.. சம்பவ இடத்திலேயே பலியான குடும்பம்.. சடலங்களை அகற்றும்போது கண்ட அதிர்ச்சி காட்சி!.. 8 ஆண்டுகளுக்கு பின் போலீசாரின் பரபரப்பு முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சுக்கு சுற்றுலா சென்று திரும்பி வந்து கொண்டிருந்த பிரிட்டன் குடும்பம் ஒன்றின் காரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

அப்போது அந்த வழியாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விமானப்படை விமானி martin இதை கவனித்து காரின் என்ஜின் செயல்பாட்டிலேயே இருப்பதை அறிந்து அந்த காரை எட்டிப்பார்த்துள்ளார். அதில்தான் அந்த குடும்பத்தலைவர் Saad al Hilli, அவரது மனைவி iqbal, அவரது தாயார் Suhaila Al allaf  ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளனர். இதனிடையே அந்த காரின் அருகில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier என்கிற பிரான்சு நாட்டவரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்தான் காருக்குள் இருந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை விமானி Martin கண்டுள்ளார். மேலும் அவர் காரை நோக்கி செல்லும்போது காருக்கு பின்னால் இருந்து Zainab என்கிற 7 வயது குழந்தை அவரைக் கண்டதும் அவரை நோக்கி நடந்து வர , அதற்குள் அவள் மயங்கி தரையில் விழுந்து விட்டாள். உடனடியாக குழந்தையை மீட்டு பாதுகாப்பான நிலையில் இருத்தி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் Martin.

அந்த பகுதியில் இந்த குடும்பத்தினர் சற்று தொலைவில் கூடாரம் அமைத்து தங்கி இருந்துள்ளனர். அப்போது அந்த குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்ததை தாங்கள் பார்த்ததாக இன்னொரு குடும்பம் சொல்ல உடனே போலீசார் ஹெலிகாப்டர் உதவியுடன் அப்பகுதியில் தேடியுள்ளனர். மறுநாள் ஆனபிறகு இறந்தவர்களின் உடலை அகற்றும்போதுதான் போலீஸார் கண்ட காட்சி அதிர வைத்துள்ளது. ஆம் தாயின் கால்களுக்கு இடையில் அவரது இரண்டாவது குழந்தையான 4 வயதான Zeena பயந்து நடுங்கி ஒளிந்து இருந்திருக்கிறாள்.

அவ்வளவு நேரமும் தன் தாயின் கால்களுக்கு இடையில் இருந்த Zeenaவை யாருமே கவனிக்கவில்லை. குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 நாளைக்கு பின் தோளில் குண்டு பாய்ந்திருந்த மூத்த குழந்தை, துப்பாக்கியால் சுட்டது ஒரு நபர் மட்டுமே என்றும் அவர் தன்னை தலையில் அடித்ததாகவும் தெரிவித்தாள்.

2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகள் இந்த 2 குழந்தைகள் மட்டுமே. இவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நடந்த அந்த சம்பவம் இவர்கள் கண்முன்னே இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு போலீசார் பிரிட்டன் போலீசாரிடம் அனுமதி பெற்று மேற்கொண்டு விசாரணையை துவக்கியுள்ளனர். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் அளிக்கும் தகவல்கள் குற்றவாளியை பிடிப்பதற்கு உதவும் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்