148 வயசுல உயிரிழந்த மருத்துவர்??.. கல்லறையில் இருந்த ஒரு வார்த்தை.. பல நூறு வருஷமா தொடரும் மர்மம்?!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டனில் இருந்து, சுமார் 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கல்லறையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மருத்துவர் தொடர்பான செய்தி ஒன்று, தற்போது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பரபரவென இயங்கிய விமான நிலையம்.. "அங்க இருந்த குப்பை தொட்டி'ல கைவிட்டு பாத்தப்போ.." மிரண்டு போன அதிகாரிகள்

மருத்துவரான வில்லியம் மேட் என்பவர், கடந்த 1652 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். Hertfordshire என்னும் பகுதியில், தேவாலயம் ஒன்றின் அருகே இவரது உடல் புதைக்கவும் செய்ததாக கூறப்படும் நிலையில், அவரது கல்லறையில் செதுக்கப்பட்ட வாசகம் ஒன்று தான், தற்போது பலரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

வில்லியம் கல்லறையில் அமைந்துள்ள கல்வெட்டின் படி, அவர் 148 வது வயதில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதில் இடம்பெற்றுள்ள வாக்கியத்தில், "148 வயது, 9 மாதங்கள், 3 வாரங்கள் மற்றும் நான்கு நாட்களில், அக்டோபர் 28, 1652 இல் இந்த வாழ்க்கையில் இருந்து உயிர் துறந்தார் வில்லியம் மேடு" என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒருவர் 148 வயது வரை வாழ்ந்ததாக கூறப்படும் தகவல், மிக மிக புதிதாக பலருக்கும் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதே வேளையில், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், 1500-களில் வாழ்ந்த ஐரோப்ப மக்கள், பலரது ஆயுட்காலம் 30 முதல் 40 வரை தான் இருந்தது. ஆனால் வில்லியமின் ஆயுட்காலம் 148 வயதாக இருப்பதால், இது நம்ப முடியாத ஒன்று என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதே வேலையில் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, 1600-களில் வாழ்ந்த டாக்டர் வில்லியம், நீண்ட ஆயுளுக்கான அமிர்தம் ஒன்றை உருவாக்கி அதனை உண்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், மருத்துவரின் மனைவி, தனது கணவரின் மருந்து விற்பனைகளை அதிகரிப்பதற்காக, அவரது கல்வெட்டில் அப்படி எழுத செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

இது போக, வில்லியம் இறந்து, கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால், அவரது இறந்த வயது தொடர்பான கல்வெட்டு குறிப்பு, அவ்வப்போது சிலரின் கவனக்குறைவால், கீழே விழுந்து உடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த துண்டுகளை ஒன்றாக வைத்ததால், நடுவே உள்ள நிறைய தகவல்கள் மறைந்து போனாலும், அவரது வயது 148 என்று இருப்பது மட்டும் தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர், 148 வரை வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்ட கல்லறையில் உள்ள கல்வெட்டு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | உலகின் விலை உயர்ந்த Trash Bag.. "ஒரு பேக் மட்டும் இவ்ளோ லட்சம் ரூபாயா??.." அப்படி என்னய்யா அதுல இருக்கு??

BRITISH, BRITISH DOCTOR, மருத்துவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்