பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு!... பிரிட்டன் அரசை 'சட்டத்திருத்தம்' செய்ய வைக்கும் 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா தாக்குதலால் தேங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்க 330 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்) ஊக்கத் தொகையை அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட வழிகளில் இந்நிதி செலவிடப்படும் என ரிஷி சுனாக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மற்றும் ஆரோக்கிய ரீதியில் மட்டுமின்றி பொருளாதாரத்தையும் கொரோனா வெகுவாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் போர் தவிர்த்த மற்ற காலங்களில் இது போன்ற பொருளாதார பாதிப்பை தங்கள் நாடு சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் கூறியுள்ளார். மக்களின் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் பதிவிட்டார்.
இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடனான போரை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனாவின் கோரத் தாக்குதலால் பிரிட்டனில் இதுவரை 171 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
- ‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..!
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
- ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...
- ஐயோ... கொரோனா வைரஸா...? 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...!
- கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...
- 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
- 'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு!