மக்களின் 'பிரார்த்தனை' வீண் போகவில்லை... ஐ.சி.யூ-வில் இருந்து... 'சாதாரண' பிரிவுக்கு மாற்றப்பட்ட பிரதமர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மாதம் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் கொரோனா தொற்று குறையவில்லை.

இதையடுத்து கடந்த 5-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மறுநாளே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் குணமாகி மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுமென உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். எனினும் அவர் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்