'கொரோனாவால்' தீவிர சிகிச்சை பிரிவில் 'அனுமதிக்கப்பட்ட' பிரதமர்... உருக்கமான 'பிரார்த்தனைகளை' முன்வைக்கும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா சிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

உலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும் உடனடியாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னரும் அவருக்கு கொரோனாவின் அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலையை கண்காணித்து வரும் மருத்துவ குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதையடுத்து தற்போது #BorisJohnson என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த ஹேஷ்டேக்கின் கீழ் உலக மக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென உருக்கமான ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்