எது நடக்க கூடாதுன்னு நெனச்சமோ 'அது' நடந்துடுச்சு...! 'ஓமிக்ரான் வைரஸின் முதல் பலி...'
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் கடந்த வாரம் வரையிலும் ஆயிரத்து 898 பேருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவில்லை என்றால் ஒமிக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் மற்றும் டிராபிகல் மெடிசனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளிலிருந்து பணி செய்வது, முகக்கவசம் அணிவதை அதிகரிப்பது, சில பொது இடங்களுக்கு கோவிட் அனுமதி சீட்டுகளை கொண்டுவருவது போன்ற திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டனில் புதியதாக 54 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதில், 633 பேருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.
முன்னதாக இரு டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே உங்களை ஓமிக்ரான் திரிபிலிருந்து பாதுகாக்காது என பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
பிரிட்டனில் ஓமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டெல்டா திரிபால் பாதிப்பட்டவர்களை ஆராய்ந்ததில் இந்த புதிய திரிபை தடுப்பு மருந்துகள் வீரியமாக தடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பு மருந்துக்கு பிறகு மூன்றாவதாக பூஸ்டர் போட்டுக் கொள்வது 75 சதவீத மக்களுக்கு கோவிட் அறிகுறிகள் வராமல் தடுக்கிறது.
இந்த நிலையில் பிரிட்டனில் ஓமிக்ரான் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதன்முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!
- நாம பண்ற 'தப்பு' இது தான்...! - ஓமிக்ரான் வைரஸ் குறித்து WHO தலைமை மருத்துவர் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!
- இந்தியாவில் கொரோனா 'மூன்றாவது அலை' எப்போது...? - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட IIT விஞ்ஞானி...!
- ஓமிக்ரான் 'டெல்டா வைரஸ' விட ஆபத்தானதா...? - அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் கருத்து...!
- இந்தியால நேத்து 'ஒருநாள்' மட்டும் 'இத்தனை' பேருக்கு ஓமிக்ரான் வைரஸா...? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்...!
- 'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!
- உலகமே 'ஓமிக்ரான' நினைச்சு 'ஃபீல்' பண்ணிட்டு இருந்தப்போ... 'மனசு குளிருற மாதிரி வந்துள்ள கிரேட் நியூஸ்...' - தென் ஆப்பிரிக்க மருத்துவர் சொன்ன தகவல்...!
- “இது ஆரம்ப நிலை தான்”!.. ஓமிக்ரான் பற்றி முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- இந்தியாவிற்குள் வந்த ஓமிக்ரான்.. அறிகுறி உள்பட தெரிய வேண்டிய 10 உண்மைகள்
- அது ஒண்ணும் 'பாப்கார்ன்' இல்லங்க...! 'ஓமிக்ரான் வைரஸ்...' - பிசிசிஐ-ஐ எச்சரித்த அமைச்சர்...!