பிரிட்டனுக்கு திரும்பும் 8 நாட்டு மக்களுக்கு ‘புதிய அறிவிப்பு!’.. .. ‘குவாரண்டைன் பட்டியலில் இணைக்கப்பட்ட இன்னொரு நாடு’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கு சுய தனிமைப்படுத்துதல் விதிமுறை அமலில் இருக்கிறது,

எனினும் சுய தனிமைப்படுத்தப்படும் நாட்களில் மக்கள் அதைப் பின்பற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஐஸ்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கம்போடியா, லாவோஸ், சிலி, பஹ்ரைன், கத்தார் மற்றும் துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் இருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் இந்த வார இறுதியில் இருந்து, அதாவது சனிக்கிழமையில் இருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கூறும் கிரீட் , ரோட்ஸ், ஜாகிந்தோஸ் மற்றும் கோஸ் போன்ற நாடுகள் தனிமைப்படுத்தப்படும் பட்டியல் இருப்பதாகவும் இந்த பட்டியலில் தற்போது கிரீஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக உள்ளது கிரீஸ். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் பிரிட்டனில் வசிப்பவர்கள் வெளிநாடுகளுக்கு அல்லது வேறு எங்கும் பயணிக்க முடியாது என்றும் அரசு வலைதளம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்