'பிரிட்டனும்' தடுப்பு மருந்தை 'கண்டுபிடித்தது...' 'முதல்கட்ட' சோதனை 'வெற்றி'.... 'அடுத்தக்கட்ட' சோதனை 'தீவிரம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை விலங்குகளிடம் பரிசோதனை செய்ததில் வெற்றி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய இங்கிலாந்து மருத்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சீனாவும், அமெரிக்காவும் ஏற்கெனவே மனிதர்களிடம் தங்களுடைய சோதனையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக 133 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீவிர முயற்சியின் பலனாக அந்நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல்கட்டமாக தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த மருந்து ஏற்கனவே ஆய்வகத்தில் வளர்க்கப்படும் விலங்குகளின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, நோய் பாதித்த மனிதர்களிடம் அல்லது தன்னார்வலர்களிடம் இதை செலுத்தி சோதனை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் இந்த சோதனை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை வெற்றி பெற்றால், உடனடியாக அந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்