ஒரு நொடில வானிலை மாறிடுமாம்.. மக்களை திகைக்க வைக்கும் வானவில் மலை.. பின்னாடி இருக்கும் சுவாரஸ்ய உண்மை.. !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெருவில் அமைந்துள்ள வானவில் மலை பல லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகளை ஈர்த்துவருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான்கூட டாக்டர் தான்".. மேட்ரிமோனியில் வலைவிரித்த இளைஞர்.. நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

பெரு

தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது பெரு. ஈக்குவடார், பொலிவியா, பிரேசில் ஆகிய நாடுகளை எல்லை தேசங்களாக கொண்டிருக்கும் பெரு, உலகின் வித்தியாசமான புவியியல் அமைப்புகளை கொண்டிருக்கும் நாடுகளுள் ஒன்றாகும். ஒருபக்கம் குளிர் நிரம்பிய மலைகள், மற்றொரு பகுதியில் பாலைவனம், மழைக்காடுகள் என கணிக்க முடியாத நிலப்பரப்பை பெரு பெற்றிருக்கிறது. அமேசான் மழைக்காடுகளை அதிகஅளவில் பெற்றிருக்கும் இரண்டாம் நாடு பெரு தான். முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இங்குதான் உலக புகழ்பெற்ற மாச்சு பிச்சு அமைந்திருக்கிறது. சுற்றுலாவாசிகளுக்கு விருந்து படைக்க பல இடங்கள் இங்கே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது வானவில் மலை.

வானவில் மலை

பெருவில் அமைந்திருக்கும் ஆண்டிஸ் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் (17,100 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த புகழ்பெற்ற வானவில் மலை. அதாவது எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் பாதியளவு இந்த மலை உயர்ந்து நிற்கிறது. இங்கே, வானவில் போன்று நிற அடுக்குகளாக மண் இருக்கிறது. தங்கம், நீலம், கருப்பு என பல வண்ணங்களில் பரவிக் கிடக்கும் இந்த மண்ணில் 14 வகையான கனிமங்கள் இருக்கின்றன. இதுவே இந்த வண்ணங்களுக்கு காரணம் என்கிறார்கள் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மலைப்பகுதியில் இன்னொரு விசித்திரம் இங்கு நிலவும் காலநிலை. வெயில் அடிக்கும் நாட்களிலேயே நொடியில் வானிலை மாறிவிடும். அடுத்த நிமிடமே மழை பெய்யும். அதனை தொடர்ந்து குளிர் என நம்மால் எளிதில் கணிக்க முடியாத வானிலை இந்த பிரதேசத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது.

சுற்றுலா

ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மலையை பார்வையிடுகின்றனர். இது வினிகுன்கா என்றும் அழைக்கப்படுகிறது, இது பெருவின் தாய்மொழியான கெச்சுவாவிலிருந்து உருவானது. இதற்கு "வண்ண மலை" எனப்பொருளாகும். 4 ஆண்டுகளுக்கு முன்பு, முழுவதுமாக பனியால் மூடப்பட்டிருந்ததால், மலையின் அழகை முழுமையாகக் காண முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பனி உருகிய பிறகு மீண்டும் சுற்றுலாத்துறை இப்பகுதியில் செழிப்படைந்து வருகிறது.

Also Read | 38 வருசத்துக்கு முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. "அங்க இருந்த பதுங்கு குழி'ல பாத்தப்போ.." இத்தனை வருஷம் கழிச்சு தெரஞ்ச 'விஷயம்'

RAINBOW MOUNTAIN, RAINBOW MOUNTAIN AKA VINICUNCA, PERU, வானவில் மலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்