கனவுல கூட இந்த தீவுக்கு போய்டவே கூடாது.. மனுஷங்களே கிடையாது.. கால் வைக்குற இடமெல்லாம் பாம்புதானாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் நாட்டில் உள்ள தீவு ஒன்றில் உலகின் அதீத விஷம் கொண்ட பாம்புகள் மட்டுமே வாழ்ந்துவருகின்றன. இங்கே மனிதர்கள் நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 5 வருஷமா freezer-க்குள்ள ஒரு உருளைகிழங்கை பொத்தி பொத்தி பாதுகாக்கும் பெண்.. காரணத்தை கேட்டு கன்ஃபியூஸ் ஆன நெட்டிசன்கள்..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வார்கள். அந்த வகையில் பாம்பின் மீதான பயம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஒரு தீவு முழுக்க பாம்புகள் மட்டுமே இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? ஆம். பிரேசில் உள்ள தீவு ஒன்றில் உலகின் மிக அதிக விஷத்தை கொண்டிருக்கும் பாம்புகள் இருக்கின்றன. இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அல்லது பாம்பு தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு மனிதர்களின் சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.

பாம்பு தீவு

பிரேசிலின் சாவோ பாலோ கடற்கரையிலிருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ளது இந்த பாம்பு தீவு. வெப்பமண்டல காடுகளால் நிறைந்த இந்த தீவில் ஒவ்வொரு சதுர அடிக்கும் ஒரு பாம்பு இருக்கலாம் என்கிறார்கள் உயிரியலாளர்கள். பொதுவாக இந்த தீவுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், பிரேசில் நாட்டின் கடற்படையின் உறுப்பினராகவோ அல்லது பல்லுயிர் பாதுகாப்புக்கான சிகோ மென்டிஸ் இன்ஸ்டிடியூட் வழங்கிய அனுமதி கடிதத்தை கொண்டிருக்கும் ஆய்வாளராகவோ இருந்தால் இங்கே செல்ல அனுமதி உண்டு.

இந்த தீவில் 2,000 முதல் 4,000 கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகள் உள்ளன. இது உலகம் முழுவதும் உள்ள கொடிய பாம்புகளில் ஒன்றாகும். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு விஷப் பாம்புகளின் எண்ணிக்கை இங்கே அதிகமாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பனியுகம் முடிவிற்கு வந்தபோது இந்த தீவு நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த தீவையே ஆக்கிரமித்திருக்கிறது பாம்புகள்.

கலங்கரை விளக்கம்

இந்த தீவில் வசிக்கும் பறவைகளை இந்த பாம்புகள் உணவாக உட்கொள்வதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு மீனவர் இந்த தீவுக்கு சென்றதாகவும், அடுத்தநாள் அவரது உடல் மட்டுமே கடலில் மிதந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் யாரும் சின்ஹா தீவுக்கு செல்லவும் விருப்பப்படுவதில்லை. ஆனால், 1900களில் இங்கே ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருக்கிறது. அதனை பாதுகாக்க ஒரு குடும்பம் மட்டுமே இந்த தீவில் வசித்து வந்ததாகவும், அவர்களும் பாம்புகளின் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரே தீவில் வசித்துவரும் இந்த பாம்புகள், இரை கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டால் அது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த தீவில் வசிக்கும் கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளுக்கு கள்ள சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதனால் பாம்பு கடத்தல் இப்பகுதியில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்பு கள்ள சந்தையில் 24,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார்கள் பிரேசில் கடல்பாதுகாப்பு அதிகாரிகள்.

Also Read | காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை.. "விருந்துக்கு வா" என அழைத்து சகோதரர் செஞ்ச காரியம்.. பரபரப்பான கும்பகோணம்..!

BRAZIL, SNAKE ISLAND, ILHA DA QUEIMADA GRANDE, பாம்பு தீவு, பிரேசில்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்