"உள்ள போனவங்க யாரும் உயிரோட வெளியே வந்தது கிடையாது".. 100 வருடங்களுக்கு மேலாக தொடரும் மர்மம்.. உறையவைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் பயங்கரமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் பீச்வொர்த் மனநல மருத்துவமனை இன்றுவரையில் பல மர்மங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "இந்த பையனுக்கு ஹெல்ப் பண்றது பாக்கியம்".. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மாணவன்.. இப்போ வேற லெவலுக்கு போய்ட்டாரு.. அவரே பகிர்ந்த சூப்பர் தகவல்..!

சிகிச்சை

மருத்துவ வளர்ச்சி விரிவடையாத காலங்களில் நோயாளிகளை குணப்படுத்த பல்வேறு விதமான கடுமையான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கான சான்றுகள் உலகம் முழுவதுமே இருக்கின்றன. சொல்லப்போனால் இன்று வளர்ந்திருக்கும் நாடுகள் பலவற்றிலும் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவனைகள் இருந்திருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை மக்களை துன்புறுத்தியதாக நிரூபிக்கப்பட்டு அவை அரசால் தடை செய்யப்பட்டன. அந்த வகையில் பயங்கரமான காப்பகங்களில் ஒன்றாக கருதப்படும் பீச்வொர்த் மனநல காப்பகம் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது.

பீச்வொர்த் பீச்வொர்த் மனநல காப்பகம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்திருக்கிறது இந்த பீச்வொர்த் பீச்வொர்த் மனநல காப்பகம். 1867 முதல் 1995 வரை இந்த காப்பகம் செயல்பாட்டில் இருந்திருக்கிறது. இந்த மருத்துவமனை கிட்டத்தட்ட 106 ஹெக்டேர் (260 ஏக்கர்) விவசாய நிலங்களால் சூழப்பட்டது. மேலும், பண்ணைகள் உள்ளிட்டவற்றை உள்ளேயே கொண்டிருந்ததால் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் இதன் உள்ளேயே கிடைத்திருக்கின்றன. மருத்துவமனையை சுற்றி, உட்புறமாக அகழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உள்பக்க சுவரின் அருகில் இருக்கும் பகுதிகள் தாழ்வாக இருக்கும்படி கட்டப்பட்டிருக்கின்றன. இதனால் இங்கிருந்த நோயாளிகள் வெளியே தப்பிச் செல்வதை அதிகாரிகளால் தடுக்க முடிந்தது.

ஆய்வு 

சுமார் 120 வருடங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனையில் ஒருமுறை உள்ளே சென்றவர்கள் மீண்டும் உயிருடன் வெளியே வந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக 1950 களில்  கொடூரமான கொலை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபவர்களையும் இந்த மனநல மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பியதாக தெரிகிறது. இதுவரையில் இந்த காப்பகத்தில் 9000 பேர் மரணமடைந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

இங்கே வரும் நோயாளிகளுக்கு எலெக்ட்ரிக் ஷாக் உள்ளிட்ட கொடுமையான தண்டனைகள் சிகிச்சை என்னும் பெயரில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் தற்போது காட்சியளிக்கும் இந்த காப்பகத்தை அமானுஷ்ய விஷயங்களை ஆய்வு செய்யும் குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்துவருகின்றனர். இந்த பகுதி மக்கள் இந்த காப்பகத்தை ஒரு திகில் நிறைந்த இடமாகவே கருதுகின்றனர்.

Also Read | "Dress வாங்கக்கூட எங்ககிட்ட பணம் இல்ல.. இப்போ நெனச்சாலும்".. வறுமையில் வாடிய நாட்களை நினைவுகூர்ந்த எலான் மஸ்க்கின் தாய்..!

AUSTRALIA, VICTORIA TOWN, BEECHWORTH LUNATIC ASYLUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்