‘ஏம்மா இதெல்லாம் ஒரு கண்டிஷனாம்மா..!’-கல்யாணத்துக்கு வருபவர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த மணமகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கல்யாணம் என்றாலே பல சந்தோஷங்களுக்கு மத்தியில் அங்கு கலாட்டாக்களுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு மணப்பெண் போட்ட ஒரு கண்டிஷன் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ரெட்டிட் என்னும் சமுக வலைதள பக்கத்தில் பெண் ஒருவர் தனது தோழி எப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு தன்னுடைய கல்யாணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளார் என்பதை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவுதான் தற்போது அந்த மணப்பெண்ணையே நெட்டிசன்கள் விமர்சிக்கும் அளவுக்கு வைரலாகி உள்ளது. தன் தோழிக்கு மணப்பெண் கொடுத்துள்ள அழைப்பில், “என்னுடைய திருமணத்தில் விருந்தினர்களுக்கு விருந்து கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. இந்த காரணத்தால் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு தலைக்கு 99 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 7,300 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழைப்பை சமுக வலைதளத்தில் பகிர்ந்த அந்த மணமகளின் தோழி, “எங்கள் வீட்டில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்துதான் அந்த திருமணத்துக்குப் போக வேண்டும். அதிலும் திருமண நிகழ்வில் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாதாம். இதனால், என்னுடைய போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, அலங்கார செலவு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என இதெல்லாம் செலவு செய்து அங்கு போனால் அங்கு நான் சாப்பிட வேண்டிய உணவுக்கும் பணம் செலுத்த வேண்டுமாம்” என மிகுந்த மன உளைச்சலுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கு வரும் விருந்தினர்கள் மணமக்களின் வருங்காலத்துக்காக, வீடு, ஹனிமூன் ஆகியவற்றுக்காகவும் உதவும் வகையில் உண்டியல் ஒன்றையும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வைத்துள்ளதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகளின் தோழியான இந்தப் பெண் பதிவிட்டதன் அடிப்படையில் திருமணம் ஆகப் போகும் அந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 3 குழந்தைகளும், சொந்த வீடும் இருக்கிறதாம்.

இந்தப் பதிவை சமுக வலைதளங்களில் பலர் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துவிட்டு கடந்தாலும் இன்னும் பலர் ‘மகிழ்ச்சியான திருமண விழாவில் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்?’ என்றும் ‘பணம் கட்டி அவர்கள் கொடுப்பதை சாப்பிடுவதற்குப் பதிலாக ஹோட்டலுக்குச் சென்று அதே பணத்துக்கு பிடித்ததை வாங்கிச் சாப்பிடலாம்’ என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.

CELEBRATION, WEDDING, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்