சேத்துவச்ச காசை எல்லாம் போட்டு ஏற்பாடு செய்த திருமணம்.. முந்துன நாள் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை.. கடைசிநேரத்துல பொண்ணு செஞ்ச விஷயம் தாங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் திருமணத்திற்கு முன்தினம் மணமகன் ஓட்டம் பிடித்த நிலையில், மணமகள் எடுத்த துணிச்சலான முடிவு பலரையும் ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

காதல்

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் கெய்லி ஸ்டெட். 27 வயதான இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவருடன் டேட்டிங்கில் இருந்த கெய்லி, 2020 ஆண்டு அவர் தனது காதலை வெளிப்படுத்திய நேரத்தில் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து இருவர் வீட்டிலும் இதுகுறித்து பேச்சு எழுந்திருக்கிறது. இறுதியாக செப்டம்பர் 15 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக உள்ளூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியை பிடித்திருக்கிறார் கெய்லி.

திருமணத்திற்கு முந்தினம் இரவு ஹோட்டலின் அருகே அமைந்திருந்த கேரவனில் கெய்லி தனது தோழிகளுடன் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலை அவருக்கு ஒப்பனை செய்யும் பணியாளர்கள் வந்து சேர்ந்தவுடன், அதற்காக தயாராகியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் மணமகனை காணவில்லை என கெய்லியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் குழம்பிப்போன கெய்லி, தனது காதலனுக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், அவரால் தனது காதலனை தொடர்புகொள்ள முடியவில்லை.

சோகம்

விரைவில் இந்த விஷயம் கெய்லி குடும்பத்தினருக்கு தெரியவரவே, மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் மணமகனின் தாயாருக்கு போன் செய்திருக்கிறார் கெய்லி. போனில் பேசிய அவர் காலையில் வெளியே சென்ற மகனை காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். இதனால் உடைந்துபோன கெய்லி, என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் மூழ்கியிருக்கிறார். அவரை குடும்பத்தினர் சமாதானம் செய்திருக்கின்றனர். அப்போது, வீடியோ எடுக்கும் நபர், "உங்களை விட்டு பிரிந்து சென்ற நபரை பற்றி கவலைப்படாமல் இன்றைய தினத்தை கொண்டாடுங்கள்" என கெய்லிக்கு அறிவுரை சொல்ல, அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார் கெய்லி.

கொண்டாட்டம்

மணமகள் அழைப்பு, நடனம், பட்டாசு, விருந்து என தனது குடும்பத்தினருடன் அன்றைய தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கெய்லி. இதுகுறித்து அவர் பேசுகையில்,"அன்றைய தினம் நான் முழுவதும் உடைந்துபோய்விட்டேன். அவர் என்னை விட்டு நீங்கியது ஏன் என இந்நேரம் வரை தெரியவில்லை. ஆனால், அன்றைய தினம் சோகத்துடன் முடிவடைய நான் விரும்பவில்லை. ஆகவே எனது சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் அன்றைய தினத்தை கொண்டாட நினைத்தேன். திருமணம் குறித்த கவலை இருந்தாலும், எனக்காக அங்கு வந்தவர்களை கவலையுடன் வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை" என்றார்.

இந்த திருமணத்திற்காக 12 ஆயிரம் யூரோக்களை சிரமப்பட்டு சேர்த்து வைத்ததாகவும், அவ்வளவு தொகையும் வீணாகிவிடக்கூடாது என்பதும் தனது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததாகவும் கெய்லி தெரிவித்திருக்கிறார். கெய்லியின் இந்த கதை பலரையும் கண் கலங்க செய்திருக்கிறது.

MARRIAGE, BRIDE, UK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்