‘கல்யாணத்துக்கு வரவங்க கட்டாயம் இத கொடுக்கணும்’.. மெசேஜ் அனுப்பிய மணப்பெண்.. மிரண்டுபோன கல்லூரி மாணவி..!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது திருமணத்துக்கு வருபவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என மணப்பெண் வினோத கண்டிஷன் போட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் அனைவருக்கும் செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் 50 டாலர் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைப் பார்த்த அவரது உறவுக்கார கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்து மணப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், எனது திருமணத்துக்கு வரும் அனைவரும் 50 டாலர் நுழைவு கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். Venmo என்ற மொபைல் கட்டண சேவை மூலம் முன்பணமாக நீ 50 டாலர் கொடுத்துவிட்டால், கல்யாண நாளன்று நுழைவு கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க தேவையில்லை. உன்னை ‘Exclusive Guest List'-ல் சேர்த்துவிடுகிறேன் என பதிலளித்துள்ளார்.
இதனால் கோபமான மாணவி, உனது திருமணத்துக்கு வர நாங்கள் ஏன் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, திருமண நாளன்று நான் செய்யும் செலவுகளை ஈடுகட்டதான் இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ளார். இந்த பதிலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மாணவி, உனது கல்யாணத்துக்கு வர எனக்கு விருப்பமில்லை என போனை துண்டித்துள்ளார். இதனை ரெடிட் (reddit) என்ற அமெரிக்க செய்தி மற்றும் விவாத வலைதளத்தில் அந்த கல்லூரி மாணவி பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 'ரோபோவுக்கு' கூட உயிர் கொடுக்க முடியுமா? இதோ 'விஞ்ஞானிகள்' சாதித்து விட்டனர்... 'ஸ்டெம் செல்' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி...
- பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...
- “இதான் அந்த சர்ப்ரைஸா?”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது!”.. “வேறலெவல்” வீடியோ!
- 2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
- மீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- எங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...
- ‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...
- ட்ரெண்டிங்கில் 'World War 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...