ராணுவ வீரர்களுக்கு 35,000 "பவர்புல் மாத்திரைகளை" வாங்கிய பிரேசில்? விட்டு விளாசும் எதிர்க்கட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் நாட்டில் ரானுவ வீரர்களுக்கு 35,000 பவர்புல் மாத்திரைகளை அந்நாட்டு ராணுவம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அந்த நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ப்ளூ பில்

பிரேசில் ராணுவம் தனது வீரர்களுக்கு சில்டெனாபில் மூலப்பொருள் கொண்ட மாத்திரைகளை பெருமளவில் வாங்கி இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது சமூக வலை தளங்களில் காட்டமாக விவாதம் செய்யப்பட்டுவருகிறது. மேலும், நாட்டு மக்களின் வரிப் பணத்தை பிரேசில் அதிபர் போல்சனாரோ வீணடிப்பதாக சரமாரியாக குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர் எதிர்க்கட்சியினர்.

எதிர்ப்பு

பிரசில் நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் எலியாஸ் வாஸ் தகவல் அறியும் கோரிக்கை மூலமாக இந்த தகவலை பெற்றதாக கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து அவர் பேசியபோது, "நம் மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை, ஆனால் போல்சனாரோவும் அவரது குழுவினரும் 'சிறிய நீல மாத்திரையை' வாங்க பொதுப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒழுக்கமற்ற செயல்" என விமர்சித்திருந்தார்.

சில்டெனாபில் மூலப்பொருள் கொண்ட மாத்திரைகளை பிரேசில் ராணுவம் வாங்கியுள்ளதாகவும் அவர் பேசுகையில் தெரிவித்திருந்தார். இது அந்த நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் காங்கிரஸ் உறுப்பினர் Marcelo Freixo இதுபற்றி பேசுகையில்," இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது" என்றார்.

விளக்கம்

இந்நிலையில், பிரேசில் பாதுகாப்புத்துறை, நுரையீரலில் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளை குணப்படுத்த இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இது எரியும் பிரச்சினையில் எண்ணெயை ஊற்றுவது போல மாறியுள்ளது. அந்நாட்டு மக்கள் அதிபர் போல்சனாரோவுக்கு எதிராக சமூக வலை தளங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

பிரேசில் ராணுவம் தனது வீரர்களுக்கு சில்டெனாபில் மூலப்பொருள் கொண்ட மாத்திரைகளை பெருமளவு வாங்கிய விவகாரம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"யாரு சாமி இவன்… கொஞ்ச நேரத்துல மிரட்டிட்டான்” – முதல் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த RCB வீரர்

BRAZIL, BRAZILIAN ARMY, BLUE PILLS, PATIENTS, HYPERTENSION, ராணுவ வீரர், ப்ளூ பில், மாத்திரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்