கல்லறைக்குள் கேட்ட அழுகை சத்தம்.. திறந்து பார்த்துட்டு உறைஞ்சு போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் நாட்டில் உயிருடன் பெண் ஒருவர் புதைக்கப்பட்ட நிலையில், சத்தம் கேட்டு அங்கு இருந்த பணியாளர்கள் அவரை மீட்டிருக்கின்றனர். இது அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

பிரேசில் நாட்டின் Minas Gerais மாகாணத்தில் உள்ள கல்லறையில் வழக்கம்போல பணியாளர்கள் தினசரி வேலையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அப்போது, ஒரு கல்லறையில் ரத்தம் தோய்ந்து இருந்திருக்கிறது. இதனை கண்ட அவர்கள் திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது அந்த கல்லறை சிமெண்ட் பூச்சு புதிதாக இருந்திருக்கிறது. இதனிடையே பெண் ஒருவர் அழும் குரலும் அவர்களுக்கு கேட்கவே, அதிர்ந்து போன பணியாளர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

உடனடியாக கல்லறைக்கு காவல்துறையினர் விரைந்து சென்றிருக்கின்றனர். கல்லறைக்குள் இருந்து அழுகை சத்தம் வருவதை உறுதி செய்ததுடன் உடனடியாக கல்லறையை உடைத்து திறந்திருக்கின்றனர். அப்போது பெண் ஒருவர் பலத்த காயத்துடன் கல்லறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து, அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதுதொடர்பாக, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முகமூடி அணிந்த இருவர் அந்த பெண்மணியை தாக்கியதாகவும், பின்னர் கல்லறையில் வைத்து மூடியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஆயுதம் தொடர்பாக நடைபெற்ற தகராறில் அந்த பெண்மணியை இருவரும் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

BRAZIL, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்