'அங்க என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியுமா'?.. Titanic நாயகன் 'டிகாப்ரியோ'வுக்கு சவால்!.. கொந்தளித்த பிரேசில் அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனர்டோ டிகாப்ரியோக்கு பிரேசில் நாட்டின் துணை அதிபர் ஹாமில்டன் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

டைட்டானிக் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், ஹாலிவுட் நடிகர் லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் 28 விழுக்காடு காட்டுத்தீ அதிகரித்திருப்பதாக பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். 

மேலும், அதில் அமேசான் காட்டுத்தீயினால் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனரோவுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு, அமேசான் காட்டுத்தீ பரவலுக்கு அதிபர் பொல்சொனரோ கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், 'அமேசான் காடுகளில் 8 மணி நேரம் சுற்றிப்பாருங்கள், அமேசான் மழைக்காடுகள் எரிகிறாதா, இல்லையா எனத் தெரியும்' என்று நடிகர் டிகாப்ரியோவுக்கு துணை அதிபர் ஹாமில்டன் சவால் விடுத்துள்ளார்.

இந்த சவாலை நடிகர் டிகாப்ரியோ ஏற்பாரா என்பது பின்வரும் நாட்களில் தெரியவரும்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்