'டாக்டர், எங்களுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணணும்'... 'எல்லாத்தையும் ஒண்ணேவே செய்யும் இரட்டையர்கள் எடுத்த முடிவு'... டபுள் ஒகே சொன்ன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிறந்தது முதல் எதைச் செய்தாலும் ஒன்றாகவே இருக்கும் இரட்டையர்கள், வாழ்க்கையில் முக்கியமான முடிவு ஒன்றையும் ஒன்றாகவே சேர்ந்து எடுத்துள்ளார்கள்.

பிரேசிலைச் சேர்ந்தவர்கள் மாயா மற்றும் சோபியா. அச்சு அசல் போல ஒரே உருவம் கொண்ட இந்த இரட்டையர்கள், எங்குச் சென்றாலும் சேர்ந்தே செல்வது, ஒரே மாதிரியான உடையை அணிவது, என இருந்த அந்த இரட்டையர்கள் குறித்த முக்கியமான விஷயம் என்னவென்றால் பிறக்கும் போது இருவரும் ஆண்கள். ஆனால் இருவருக்கும் ஆண்களாக வாழ விருப்பம் இல்லை.

இதனால் வாழ்க்கையில் முக்கிய முடிவு ஒன்றை அவர்கள் எடுத்தார்கள். அதாவது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறிவிடலாம் என்பது தான் அது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரட்டையர்களான இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இந்த முடிவை எடுத்துத் தான்.

அதற்கு அவர்களது பெற்றோரும் பூரண சம்மதம் தெரிவித்தார்கள். அதிலும் அவர்களின் தாத்தா தான் இருவருக்கும் அறுவைசிகிச்சைக்கு ஆன பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதற்கிடையே ஜோஸ் கார்லோஸ் மார்ட்டின் என்ற மருத்துவர் 5 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து இருவரையும் பெண்ணாக மாற்றியுள்ளார்.

இரட்டையர்களாகப் பிறந்த ஆண்களைப் பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற்றியது உலகிலேயே இது தான் முதல்முறை எனக் கூறிய அந்த மருத்துவர், இதுபோன்ற முடிவு எடுக்கும்போதும் இரட்டையர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அந்த மருத்துவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்