"கொரோனா 'தடுப்பு' மருந்து போட்டா நீங்க 'முதலையா' கூட மாறலாம்... அப்படி நடந்தா நாங்க பொறுப்பில்ல..." அதிபர் பேச்சால் வெடித்த 'சர்ச்சை'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பல நாடுகளில் இந்த கொடிய தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இதற்கான தடுப்பூசியை பல உலக நிறுவனங்கள் கண்டுபிடித்து வரும் நிலையில், அதற்கான இறுதிக் கட்ட சோதனைகளில் பல தடுப்பூசிகள் உள்ளது. இந்நிலையில், பைசர் (Pfizer) தடுப்பு மருந்து நிறுவனத்துடன் பிரேசில் நாடு ஒப்பந்தம் போட்டது. ஆனால், பிரேசில் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க ஆரம்பிக்கும் நாள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து குறித்து பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro), 'பைசர் கொரோனா தடுப்பு மருந்து நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளதில் தெளிவாக உள்ளோம். அதே வேளையில், அந்த தடுப்பு மருந்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை. அப்படி கொரோன தடுப்பு மருந்தை நீங்கள் போடும் போது முதலையாக கூட மாறலாம். பெண்களுக்கு தாடியும் வளரலாம்' என தெரிவித்துள்ளார். பிரேசில் அதிபரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டி அந்நாட்டில் பெரிதாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உலக சுகாதார அமைப்பின் விமர்சனத்தையும் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்