கொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்டக்சன் பிரைம் என்ற தெருநாயை தத்தெடுத்து, தனது ஷோரூமில் சேல்ஸ்மேன் ஆக்கியுள்ளது பிரேசிலுள்ள ஹூண்டாய் கார் ஷோரூம். இந்த நாயின்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ஷோரூமிற்குள் நுழைந்தவுடன் உங்களை வரவேற்பது இந்த ஆண்டின் சிறந்த ஊழியர் விருதுபெற்ற நாய் என்றால் நீங்கள் அக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஷோரூமிற்கு அருகில்தான் இந்த தெருநாய் வசித்து வந்துள்ளது. அதன்பிறகு இந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளது டக்சன். பிறகு, மெல்ல மெல்ல ஷோரூமிற்குள் நுழைய ஆரம்பித்து நன்கு பழகவும் ஆரம்பித்துள்ளது. இதனால், இந்த நாயை ஷோரூமின் சிறப்புமிக்க ஊழியர் ஆக்கினார்கள்.
மேலும் அந்த நாய்க்கு தனி அடையாள அட்டையையும் நிறுவனம் வழங்கியது. இப்போது, டக்சன் சிறப்பாக வாடிக்கையாளர்களை வரவேற்று வருகிறது. மேலும், இந்த நாய் மீட்டிங்களில் கலந்துகொள்வது, கடினமாக உழைப்பது, வாடிக்கையாளர்களை வரவேற்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
டக்சன் பிரைமின் கதை இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பிறகு பல்லாயிரம் பேரின் இதயங்களை வென்றது. டக்சனின் புகைப்படங்கள் இதுவரை 30 ஆயிரம் லைக்குகள் வாங்கியுள்ளது. இந்த நாயின் தனி இன்ஸ்டாகிராம் கணக்கினை 28 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...
- 'கொரோனா காலத்திலும் ரூ 11.5 லட்சம் கோடி முதலீடு'... 'இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்களால்'... '12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!'...
- ஐடி ஊழியர்களை அதிகளவில் 'பணிநீக்கம்' செய்த முன்னணி நிறுவனம்... 3 மாசத்துல இத்தனை ஆயிரம் பேரா?... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- மொத்தம் 75,000 ஆயிரம் ஊழியர்களை... வீட்டுக்கு 'அனுப்பிய' நிறுவனங்கள்... அதிர்ந்து போன 'தமிழக' மாவட்டம்!
- இப்போ தானே 'அவ்ளோ' பேர தூக்குனீங்க?... மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் நிறுவனம்... ஊழியர்கள் அதிர்ச்சி!
- ஜாம்பவானுக்கே இந்த நிலையா?... 21,000 ஆயிரம் ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கதறும் ஊழியர்கள்!
- "வேலைய விட்டு தூக்கிட்டாங்க!.. அவங்களே வந்து என்னைய மறுபடியும் சேர்த்துக்க வைக்கிறேன்"..! ஐ.டி. ஊழியர் போட்ட 'மாஸ்டர்' பிளான்!
- 5 வருஷம் 'சம்பளமில்லா' விடுமுறை... 50% அலவன்ஸ் கட் எல்லாம் உண்டு... ஆனா யாரையும் 'வேலையை' விட்டு தூக்க மாட்டோம்!
- ஊருக்கெல்லாம் வேலை தேடி 'தந்தவங்களுக்கே' இப்படி ஒரு நெலமையா?... நூற்றுக்கணக்கான ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
- சில 'தியாகங்கள' பண்ணித்தான் ஆகணும்... முதல்முறையாக 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்!