16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’!.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா..! இப்போ குடும்ப தொழிலே இதுதான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பள்ளிக்கூடத்திற்காக மகன் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்த அவரது தந்தை, அதனை வியாபாரமாக்க தனது வேலையை உதறி தள்ளியுள்ளார்.
துபாயை சேர்ந்த இந்திய மாணவரான இஷிர் வாத்வா (16 வயது), சுவரில் துளையிடாமல், ஆணி அடிக்காமல் கனமான பொருள்களை காந்தம் மூலமாக தொங்கவிடும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இவர் துபாயில் உள்ள ஜெம்ஸ் வேர்ல்டு அகாடமியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீடுகள், அலுவலங்களில் மின்விசிறி, தொலைக்காட்சி உள்ளிட்ட கனமான மின்சாதனப் பொருட்களை சுவரில் துளையிட்டு மாட்டுவதால் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் நோக்கில், உலோக டேப் மற்றும் காந்தம் ஆகியவற்றின் உதவியுடன் கனமான பொருட்களை சுவரில் மாட்டுவதற்கு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளார்.
சுவரில் துளையிடாமல், ஆணி அடிக்காமல் பொருள்களை தொங்கவிடுவதற்கான சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என மாணவர் இஷிர் வாத்வா யோசித்துள்ளார். அப்போது அமெரிக்கா பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் தன் சகோதரர் அவிக்கிடம் இதுதொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளார்.
சகோதரர் கொடுத்த ஆலோசனையின்படி உலோக டேப், நியோடைமியம் காந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி கனமான பொருள்களை தாங்கும் தொழில்நுட்பத்தை இஷிர் வாத்வா கண்டுபிடித்துள்ளார். இஷிரின் கண்டுபிடிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்த அவரது தந்தை சுமேஷ் வாத்வா, உடனே தனது வேலையை உதறிவிட்டு மகனின் கண்டுபிடிப்பை வணிகரீதியாக தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார். பள்ளிக்கூடத்திற்காக 10ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் தற்போது அவரது குடும்பத்தின் தொழிலாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'சிஎஸ்கே'க்கு 'ரெய்னா' போனா என்ன??.." அதான் 'பஞ்சாப்'க்கு 'ரியானா' கெடச்சுட்டாங்களே.." மீண்டும் வைரலாகும் 'சூப்பர்' ஓவர் 'Girl'!!!
- 'சார் நீங்க ஆன்லைன்ல தான் இருக்கீங்க'... 'ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்ததால் வந்த வினை'... தொக்காக மாட்டிய ஆசிரியரும், ஆசிரியையும்!
- “லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க!”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி!
- VIDEO : "அடேங்கப்பா,, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே..." பிறக்கப் போகும் 'குழந்தை'யின் பாலினத்தை அறிவிக்க... வேற லெவல் 'ஐடியா'... ஹிட்டடிக்கும் 'வீடியோ'!!!
- "பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!
- '55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு!
- 'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!
- 'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- 'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்!'...