VIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா மருத்துவ பணிக்காக குடும்பத்தை பிரிந்த இருந்த தாயை நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்த மகனின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பால் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். எதிர்பாராத இந்த வைரஸ் தாக்குதலால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் சீன மக்கள் நிலைகுழைந்து போயினர். இதனால் வைரஸ் பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இரவு பகல் பாராமல் தூக்கிமின்றி கடுமையாக பணியாற்றி வந்தனர். தற்போது சீனாவில் வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நாள்களாக குடும்பத்தை பிரிந்து மருத்துவ பணியில் இருந்த பெண் ஒருவர் தனது மகனை சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் சிஜியான்ஸுவாங் நகரத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் ஹூபெய் மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டார். இப்பெண் ஒரு மாத காலம் தன் குடும்பத்தை பிரிந்து மருத்துவ பணியில் ஈடுப்பட்டு வந்தார்.

தற்போது அவர் ஊர் திரும்பும் தகவல் அறிந்ததும், அவரது மகன் அவரை காண அங்கு வந்தார். எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் வேகமாக ஓடிச் சென்ற சிறுவன் தாயை அடையாளம் காண சற்று தடுமாறினான். பின்னர் தாய் ஓடி வந்து சிறுவனை கட்டியணைத்து கொள்கிறார். இருவரும் கண்ணீர் மல்க அன்பை பகிர்ந்துகொண்ட சம்பவம் காண்போரை உருக வைத்துள்ளது.

CHINA, MOTHERSON, LOVE, CORONAVIRUS, COVID2019, CORONAVIRUSOUTBREAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்