'15 பக்கங்களுக்கு செய்திகளே இல்லை!'.. செய்தித்தாளைப் பார்த்து நொறுங்கிப் போன மக்கள்!.. அமெரிக்காவை உறையவைத்த துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையில், கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அங்கு நேற்று ஒரே நாளில் 1,939 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 42,514 ஆக உயர்ந்தது. புதிதாக 28,123 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 7,92,759 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு, 38 ஆயிரம் பேருக்கு தொற்று உள்ளது. இதுவரை, 1,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கு வெளியாகும், 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையில், 15 பக்கங்களுக்கு, காலமானார் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பகிர்ந்த நெட்டிசன்கள், கவலை தெரிவித்தனர். இத்தாலியும் இதே போல் பலியானர்வர்களின் விவரங்கள் அதிக பக்கங்களில் வெளியானதை பலரும் பகிர்ந்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்