விலைவாசி உயர்ந்துடுச்சு.. வருத்தப்பட்ட ஊழியர்கள்.. "நான் பாத்துக்குறேன்".. ஓனர் எடுத்த முடிவு.. என்ன மனசுய்யா..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் விலைவாசி உயர்வினை அடுத்து தனது ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார் நிறுவனத்தின் தலைவர் ஒருவர்.

Advertising
>
Advertising

போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதலைத் துவங்கினர். இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தேசத்தின் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் முடிவை மேற்குலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வந்தன. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் உலகத் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது பல பொருளாதாரத் தடைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் விதித்தன. இவற்றின் தாக்கம் காரணமாக இங்கிலாந்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

சர்ப்ரைஸ் பரிசு

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த கட்டுமான பொருட்களை விற்கும் நிறுவனமான எமெரிஸ் டிம்பர் தனது ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை அளித்துள்ளது. அதிகரிக்கும் விலைவாசியை கருத்தில் கொண்டு தனது ஊழியர்களுக்கு தலா 750 யூரோக்களை (இந்திய மதிப்பில் சுமார் 74 ஆயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ்.

இதனால் பிரிட்டனின் சிறந்த பாஸ் என்று கொண்டாடப்படும் ஜேம்ஸ், தனது ஊழியர்களுக்கு போனஸ் அளிப்பதற்காக 45 ஆயிரம் யூரோக்களை ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் 60 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர்,"கடந்த ஆண்டு ஊதிய உயர்வை ஒப்பிடும்போது இந்த ஐடியா கிடைத்தது. பணவீக்கம் காரணமாக மக்கள் கஷ்டப்படும்போது இந்த தொகை அவர்களுக்கு பூஸ்ட் அளிப்பதாக இருக்கும்" என்றார்.

விலைவாசி உயர்வினை கருத்தில்கொண்டு ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் தனது தொழிலாளர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்கிய சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

UK, EMERYSTIMBER, BONUS, INFLATION, இங்கிலாந்து, பணவீக்கம், போனஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்