'மரணத்தை கண்ணு முன்னாடி பார்த்தேன்'... 'கொரோனா வார்டில் நடந்தது என்ன'?... 'இங்கிலாந்து பிரதமர் உருக்கம்'... டாக்டருக்கு செய்த கைமாறு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது வந்ததாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மனம் திறந்து உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸ், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி, லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பல்வேறு போராட்டங்களுக்கு நடுவில் குணமாகி வீடு திரும்பினார்.

இந்நிலையில்  தான் மரணத்தின் விளிம்புவரை போய் உயிர் பிழைத்தது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ''கொரோனா வைரஸ் தாக்கியா பிறகு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகவும். ஒரு கட்டத்தில் என்னுடைய மரணத்தை அறிவிக்கவும் மருத்துவர்கள் தயாராக இருந்தார்கள். அதை நானும் உணர்ந்தேன். நான் அப்போது மிக மோசமான நிலையிலிருந்தேன்.

அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஏதாவது ஒரு விபரீதம் நடந்து விட்டால் என்ன செய்வதென, அடுத்த கட்ட ஏற்பாடுகளையும் டாக்டர்கள் தயாராக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் லிட்டர் லிட்டராக எனக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. என் சுவாசக் குழாய்க்கு அடியில் ஒரு குழாயை வைப்பதற்கு 50 சதவீத தேவை இருந்தது. அதை எப்படிச் செய்வது என டாக்டர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

அந்த நேரத்தில் இந்த கொடிய தருணத்திலிருந்து எப்படி மீளப்போகிறேன் என நினைத்தேன். ஆனால் பலமுறை நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அப்படி எண்ணியதில்லை. அதேபோன்று நான் மரணத்தைப் பற்றி எண்ணுகிற நிலைக்கு கூட சென்றது இல்லை. ஆனால் தற்போது அதிலிருந்து நான் மீண்டு விட்டேன். அதற்கு மருத்துவர்கள் அளித்த உன்னதமான சிகிச்சை தான் காரணம்.

இன்னும் பல் பேர் இந்த நோய்க்கு எதிராகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் மீண்டு வந்தது நிச்சயம் அதிசயம் தான்'', என போரிஸ் ஜான்சன் உருக்கத்துடன் கூறியுள்ளார். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்சுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இருவரும் தங்கள் மகனுக்கு வில்பிரட் லாரீ நிக்கோலஸ் ஜான்சன் என பெயர் சூட்டியுள்ளார்கள்.

இதில் நிக்கோலஸ் என்பது போரிஸ் ஜான்சனை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய இரு டாக்டர்களின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்