”ஐம் ஆல்ரைட் மக்களே!”.. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் வெகுவேகமாக பரவி, தாக்கி வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்த வைரஸில் இருந்து தப்பவில்லை. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.

எனினும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் அவர் ஏப்ரல் 6-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் அதற்கு மறுநாளே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பெற்று வந்த  போரிஸ் ஜான்சனின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மீண்டும் மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்