"அங்க என்னமோ இருக்கு".. மலையில் சுற்றுலா சென்றவர்கள் பார்த்த காட்சி.. வெளிச்சத்துக்கு வந்த 30 வருஷ மர்மம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவிட்சர்லாந்தில் உள்ள பனிசூழ்ந்த மலைப்பகுதியில் 30 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன நபர் ஒருவரின் உடலை சுற்றுலாவாசிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!

ஆல்ப்ஸ் மலை

கடந்த ஜூலை மாத இறுதியில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு ஒரு சுற்றுலா குழு சென்றிருக்கிறது. அப்போது வெண்பனி படலத்தின் இடையே நியான் நிற பொருள் இருப்பது தெரிந்திருக்கிறது. இதனால் குழப்பமடைந்த அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்றிருக்கிறார்கள். பனியின் வெளியே நியான் நிறத்தில் தெரிந்த துணியை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பனியை தோண்டியிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த அனைவருமே திகைத்துப்போயிருக்கிறார்கள்.

விசாரணை

காரணம் உள்ளே இருந்தது ஆண் சடலம் ஒன்று. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணிகள் உடனடியாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் சடலத்தினை மீட்டு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே இறந்தவர் அணிந்திருந்த உடை 80 களில் பயன்பாட்டில் இருந்ததை அறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் காணாமல்போன நபர்களின் பட்டியலை தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வெளிச்சத்திற்கு வந்த மர்மம்

அப்போது 1990 ஆம் ஆண்டு தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்ட 27 வயது இளைஞர் ஒருவர் காணாமல்போயிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இதன்மூலம், அவர் அணிந்திருந்த ஆடை, டின்ஏ பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றின் மூலம், காணாமல்போன நபருடைய உடல்தான் அது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இதனையடுத்து 32 வருடங்களாக தொடர்ந்த மர்மம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய சுற்றுலாவாசியும் மலையேறும் வீரருமான லூக் லெச்சனோயின்,"நாங்கள் வித்தியாசமான பொருள் ஒன்றை பார்த்தோம். அருகில் சென்றபோது தான் அது உடை என்பது தெரியவந்தது. அதன்பிறகு அருகில் உள்ள பனியை அகற்றினோம். சடலத்தை பார்த்த அந்த கணம் நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம். அதனுடன் மலையேறும் உபகரணங்களும் அருகில் இருந்தன. ஆகவே சந்தேகமடைந்த நாங்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்" என்றார்.

Also Read | "குண்டா இருக்கேன்னு டைவர்ஸ் கேக்குறாரு".. கண்ணீருடன் காவல்நிலையத்துக்கு சென்ற மனைவி.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!

SWISS GLACIER, GERMAN MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்