'இது ஒண்ணும் சாதாரண கல் கிடையாது...' '310 கிலோ எடையுள்ள ஆசியாவின் ராணி...' - 'வியக்க' வைக்கும் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் சுமார் 300 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் நீல சபையர் ரத்தினக்கல் கண்டறியப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல சபையர் (largest natural corundum blue sapphire) என அழைக்கப்படும் நீலக்கல் கொழும்பில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில் இருக்கும் சுரங்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நீல சபையர் சுமார் 310 கிலோ எடையுடன் இருப்பதாகவும் இந்த ரத்தினக் கல்லுக்கு 'ஆசியாவின் ராணி' என்று பெயரிடப்படப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை இலங்கை அரசின், தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் (The National Gem and Jewellery Authority), இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்ற சான்றளித்துள்ளது.

ஆனால் சர்வதேச ரத்தின நிறுவனங்கள் இன்னும் இந்த விலையுயர்ந்த ரத்தினக் கல்லுக்கு சான்றளிக்கவில்லை. அதோடு, தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த ரத்தினக்கல்லை மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்த இருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) தெரிவித்துள்ளார்.

நீல சபையர் கண்டறியப்பட்ட ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில் இருக்கும் சுரங்கத்தில் மேலும் பல சுத்தமான ரத்தினக் கற்கள் இருக்கக்கூடும் எனவும், அதனால் அந்த சுரங்கத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த 310 கிலோ எடையுள்ள ரத்தினக்கல்லில் அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் (aluminum oxide, titanium, iron, and nickel) உள்ளிட்டவை உள்ளதே இதன் சிறப்பு என ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா (Chamila Suranga) தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ரத்தினக் கல்லை சர்வதேச சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

BLUE SAPPHIRE, SRI LANKA, QUEEN OF ASIA, இலங்கை, ஆசியாவின் ராணி, நீல சபையர் ரத்தினக்கல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்