'ரத்தம் குடிக்குற ஜாம்பி பூச்சி...' 'கொரோனா, வெட்டுக்கிளியை தொடர்ந்து...' 'இந்த உறுப்பெல்லாம் ரொம்ப பாதிக்குது...' 'இதுக்கு எங்ககிட்ட மருந்து இல்ல...' கலங்கும் நாடு...!'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்கமே முடியாத சூழலில் தற்போது ரஷ்யாவில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு மேலும் பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு திணறி வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 423,741 பாதிக்கப்பட்டவர்களை கொண்டு மூன்றாவது எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பே முடியாத சூழலில் தற்போது ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது.
இந்த ரத்தம் உறிஞ்சும் உண்ணிகளால் காயப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் ரஷ்யா மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்த உண்ணிகள் தற்போது ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் ரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் கடிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித சிகிச்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. போதிய மருந்து இல்லாமல் ரஷ்யா திணறி வருவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களை கடிக்கும் இந்த உண்ணிகளால் பல நோய்கள் உருவாகுவதாகவும், குறிப்பாக மனித மூளையில் ஒருவித வீக்கம் ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நரம்பு மண்டலம், இதயம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
இதுவரை சுமார் 8215 பேர் இந்த ரத்தம் உறிஞ்சும் புதுவகை உண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2125 பேர் குழந்தைகள் எனவும்ரஷ்ய மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உண்ணிகள் பற்றிய ஆய்வினையும், மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்து வருகிறது.
மற்ற செய்திகள்