'கொரோனாவால்’... ‘உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த’... ‘தடுப்பு மருந்து நிறுவனர்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

Ugur Sahin joins world’s 500 richest after UK approves Covid vaccine

BioNTech founder Ugur Sahin joins world’s 500 richest after UK approves Covid vaccine

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் நிறுவனர், டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர, பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து, 95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் அனுமதி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன்னர் தான் அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் கொரொனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு என்ற பெருமையையும் அந்நாடு பெற்றது.

இதனை தொடர்ந்து பயோஎன்டெக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. வருடத்தின் மொத்த பங்குகள் சுமார் 250 சதவீதம் உயர்ந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்மனியின் உகுர் சாஹின் (Ugur Sahin) உலகின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

ஃபுளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 493-வது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. உகுர் சாஹினின் சொத்து மதிப்பு தற்போது 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. துருக்கியைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர், ஜெர்மனியில் பயோஎன்டெக் நிறுவனத்தை, தனது மனைவி ஆஸ்லெம் டுரேசி (Özlem Türeci) மற்றும் கிறிஸ்டோஃப் ஹ்யூபர் (Christoph Huber) விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கி, கேன்சர் நோய்க்கான எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தில் கணவன்-மனைவி இருவரும் தலைமை மருத்துவ அதிகாரிகளாக இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு  வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்