விண்வெளிக்கு ‘டூர்’ போக தனி விண்கலத்தை வாங்கிய முதல் கோடீஸ்வரர்.. SpaceX வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பயணம் செய்ய உள்ள முதல் நபரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளிக்கு ‘டூர்’ போக தனி விண்கலத்தை வாங்கிய முதல் கோடீஸ்வரர்.. SpaceX வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Inspiration4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயணம் செய்யும் முதல் நபராக ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) என்ற அமெரிக்க கோடீஸ்வரரை அறிவித்துள்ளது. Shift4 Payments என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தை வாங்கியுள்ளார்.

Billionaire buys multi-million dollar SpaceX flight

மேலும் இந்த ஆண்டு பூமியை சுற்றி வர தன்னுடன் மூன்று நபர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். தன்னுடன் பயணிக்கு சக பயணிகளில் ஒருவராக செயிண்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாதம் செயிண்ட் ஜூட் மருத்துவமனைக்கு அதிக நன்கொடை அளிக்கும் மூன்றாவது பயணியை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் ஸ்பேஸ் எக்ஸின் பால்கான் 9 மற்றும் டிராகன் விண்கலத்தில் தேவையான பயிற்சியை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் பூமியை வலம் வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 7 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. விண்வெளி வீரர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை டிராகன் விண்கலம் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்