13 வயசு இந்திய சிறுவனை பாராட்டிய 'பில்கேட்ஸ்'.. "அட, இது தான் காரணமா?".. இந்தியர்களை திரும்பி பாக்க வெச்ச விஷயம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மும்பையை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு பில்கேட்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இதற்கான காரணம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகவும், டாப் பணக்கார பட்டியலிலும் இருப்பவர் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான இவர், அவ்வப்போது உலகத்தை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து தனது கருத்துக்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளவர் ஆவார்.

அந்த வகையில், தற்போது இந்தியாவின் மும்பையை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவரை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

மும்பை பகுதியை சேர்ந்தவர் அன்ஷூல் பட். 13 வயதே ஆகும் இந்த சிறுவன், சீட்டுக்கட்டை போன்ற ஒரு விளையாட்டான யூத் பிரிட்ஜ் என்னும் போட்டியில் தேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், கடந்த மாதம், இத்தாலியில் வைத்து யூத் பிரிட்ஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில், அன்ஷுலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடி இருந்த அன்ஷூல், மொத்தம் மூன்று பிரிவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இதில், ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸ் பிரிவிலும் ஒரு பதக்கம் அன்ஷூலுக்கு கிடைத்திருந்தது. இத்தாலி சென்று சாதனை படைத்த சிறுவன் அன்ஷூலுக்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமானோர் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அன்ஷூல் சாம்பியன்ஷிப் பெற்று ஒரு மாதம் கழித்து தனது வாழ்த்துக்களை உலகின் முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் பகிர்ந்த ட்வீட்டில், "எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டில் புதிய இளைஞர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது பற்றி மேலும் அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அன்ஷூல் பட்" என குறிப்பிட்டு தாமதமாக வாழ்த்தியதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய சிறுவனை பில்கேட்ஸ் பாராட்டியது தொடர்பான ட்வீட், தற்போது பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. முன்னதாக, தான் சாம்பியன் பட்டம் வென்ற சமயத்தில் பேசி இருந்த அன்ஷூல், தான் இந்த விளையாட்டில் தவறு செய்யும் போது, அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, அடுத்த ஆண்டு தன்னை இந்த விளையாட்டில் இன்னும் அதிக அளவு மேம்படுத்திக் கொள்வேன் என நம்பிக்கையுடனும் அன்ஷூல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BILLGATES, ANSHUL BHATT, BRIDGE CHAMPION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்