"அமெரிக்கா 'அந்த' விஷயத்துல எதையும் ஒழுங்கா பண்ணல"... "ஆனா சீனா சிறப்பா செஞ்சாங்க"... காரணம் சொல்லும் 'பில்கேட்ஸ்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து மில்லியனரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். 'அமெரிக்கா தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்துவது மேலும் பாதிப்பிற்கு வழி வகுக்கும். அதே போல வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது கேள்விக்குறியாகி விடும். உலக சுகாதார அமைப்பு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறும் கருத்தை ஏற்று அமெரிக்கா நடப்பது நல்லது' என்றார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்தது முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பியது என்றும், அவர்கள் இதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லையென்றால் கடும் விளைவுகளை சீனா சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய பில்கேட்ஸ், 'சீனாவில் வைரஸ் பரவ ஆரம்பித்ததும் மற்ற நாடுகளை போல சீனா அரசும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தங்களது நாட்டின் பொருளாதார நிலை வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது. வைரஸ் பரவலுக்கு பல நாடுகள் வேகமாக செயல்பட்டன. ஆனால் அந்த விஷயத்தில் அமெரிக்க மிக மோசமாக செயல்பட்டது என்பது தான் உண்மை. அதை பற்றி தற்போது சிந்தித்து கொண்டிருக்காமல் சிறந்த விஞ்ஞானத்தை பயன்படுத்துவதற்கான நேரமிது. அதன் மூலம் இதற்கான தடுப்பு மருந்தை நாம் இணைந்து கண்டுபிடிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...
- 'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'
- ‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
- கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...
- '2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'
- 'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'
- 'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'
- "ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை..." 'கொரோனா ஒரே நபரை பலமுறைத் தாக்க வாய்ப்பு...' 'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்...'
- ‘10 நாட்களில் இருமடங்காக அதிகரிப்பு’... ‘வரலாறு காணாத பேரிழப்பு துயரத்திலும்’... ‘எதிர்ப்பை மீறி அதிர்ச்சி கொடுக்கும் நாடு’!