கொரோனாவ விட ஆபத்தானது 'ஒண்ணு' இருக்கு...! 'அது 2060-ல் வரலாம்...' - பில்கேட்ஸ் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த 40 ஆண்டுகளில் உலகம் மிக பெரிய காலநிலை மாற்றத்தால் அதிகளவில் உயிர் சேதங்களை பார்க்கக்கூடும் என பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா பரவி வந்த தொடக்கக்காலத்தில், தொற்றுநோய் குறித்து
பில்கேட்ஸ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
அதில் 2015-ஆம் ஆண்டு உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படக்கூடிய பேரழிவுக் குறித்து, எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காஸ்மட்டிக்ஸ் தயாரிப்பில் பல பில்லியன் செலவிடும் நிறுவனங்கள் இனி பரவ போகும் நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்புகளுக்கு செலவழிக்கலாம் என கூறினார். அதுபோலவே இன்று வரை கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.
தற்போது மீண்டும் காலநிலை மாற்றம் குறித்து எச்சரித்துள்ளார். தனது இணையதளத்தில் 'தொற்று நோயைப் போன்றே காலநிலை மாற்றமும் மோசமாக இருக்கலாம்' என்று கூறியிருக்கிறார்.
அதில் கூறியதாவது, இந்த கொரோனா நோய் தொற்று போலவே மீண்டும் மிக பெரிய மக்கள் அழிவை நாம் சந்திக்க நேரிடும், அதற்கு மக்களாகிய நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்து சுமார் 1,00,000-த்திற்கும் மேற்பட்டோர் கூட இறக்க நேரிடும்' எனக் கூறியுள்ளார்.
'உலகம் இயற்கையை கவனிக்காமல் இப்படியே சென்றால் இது அடுத்த 40 ஆண்டுகளில் இது நடக்க கூடும்' என மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்