அலுவலகத்தில் பில்கேட்ஸ் செஞ்ச சேட்டை.. பழைய வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது பழைய வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

ஆற்றில் தத்தளித்த 9 பேர்.. தனி ஒருவனாக போராடி அனைவரையும் காப்பாற்றிய நபர்.. "குல சாமிப்பா நீ" .. நெகிழும் கிராம மக்கள்..!

பில் கேட்ஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கினார்.

உலக பணக்காரர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெற்றிநடை போடத்துவங்கிய காரணத்தினால் பெரும் செல்வந்தர் ஆனார் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ப்ஸ் இதழிலின் அடிப்படையில் இவர் உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 47 வது ஆண்டு விழா கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது தன்னுடைய பழைய வீடியோ ஒன்றினை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ

அந்த வீடியோவில் ஒரு பிளாஸ்டிக் சேரின் அந்த பக்கமும் இந்த பக்கமும் அவர் குதிக்கிறார். இதனை ஒரு சிறுமி அருகில் இருந்து பார்க்கிறார். அந்த வீடியோவில்,"ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கணினிகளில் மைக்ரோசாஃப்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கான பாய்ச்சல் இது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிறுவனத்திற்கும் அதிகாரம் அளிக்கவும் தொடர்ந்து சாதிக்கவும் இந்த நிறுவனம் காரணமாக இருப்பது எனக்கு பெருமையளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

திருடப்போன இடத்தில் "கலகலப்பு" பட பாணியில் ஓட்டைக்குள் சிக்கிய உடல்.. பலே திருடனுக்கு நேர்ந்த பங்கம்..!

 

BILL GATES, INSTAGRAM REEL, MICROSOFT, MICROSOFT 47TH BIRTHDAY, பில்கேட்ஸ், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாஃப்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்