நம்ம எல்லார் வீட்டுக்கும் 'ஓமிக்ரான்' வரப்போகுது...! - பில்கேட்ஸ் பகிர்ந்த 'எச்சரிக்கை' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தான் விடுமுறையை ரத்து செய்து விட்டதாக தன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. தற்போது வரை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறதே தவிர குறைந்தப்பாடில்லை.
தென் ஆப்பரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இதுவரை சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவிட்டது.
இதனால் பல நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'இதுவரை நாம் பார்த்ததில் எந்த ஒரு வைரஸையும் விட ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது. இது டெல்டாவை விட பாதிப்பு அதிகமாக இல்லை. ஆனாலும் பரவும் தன்மை மிக வேகமாக உள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பினோம். ஆனால், நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் நம் அனைவரின் வீட்டிற்கு வரும்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. இதனால் எனது விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன். இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஓமிக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான் அது.
ஒரு நாட்டில் ஓமிக்ரான் புகுந்தால் அது அங்கு கொரோனா அலை 3 மாதங்களுக்கும் குறைவாக நீடிக்கும். நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் இரவு நேர ‘ஊரடங்கு’ அமலுக்கு வருகிறதா..? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!
- இந்த ‘அறிகுறி’ எல்லாம் இருந்தா சாதாரணமாக எடுத்துக்காதீங்க.. ஓமிக்ரோன் குறித்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- அச்சுறுத்தும் ஓமிக்ரோன்.. ‘ஆதாரம் கிடைச்சிருக்கு’.. தடுப்பூசி போட்டவங்களும் எச்சரிக்கையாக இருக்கணும்.. WHO தலைவர் முக்கிய தகவல்..!
- IND vs SA Test: ஆரம்பத்துல இருந்தே ஒரே தடங்கலா இருக்கு.. இப்போ இது வேறையா..!
- ஓமிக்ரானை 'ஃபேஸ்' பண்ண நாம 'ரெடியா' இருக்கணும்...! - எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை...!
- அசுர வேகத்தில் பரவும் ஒமைக்ரான்… தடுப்பூசி போடாதவர்களுக்குப் பெரும் அபாயம்..!
- ஒமைக்ரான் வெறும் 2 மணி நேரத்தில் பரவுகிறது... வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு
- இன்னும் 1½ முதல் 'மூன்று' நாட்களுக்குள்... 'ஓமிக்ரான் வைரஸ் குறித்து...' - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 'எச்சரிக்கை' தகவல்...!
- ஓமிக்ரான் வைரஸ் 'இந்தியா'ல பரவ தொடங்குச்சுன்னா ஒரு நாளைக்கு... - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட மத்திய அரசு...!
- ஒமைக்ரான் வைரஸ் பரவும் அபாயம்: தமிழகத்துக்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம்!